பொள்ளாச்சி, நவ.19- பொள்ளாச்சி அடுத்த கணபதிபாளையம் கிராமத்தில் விவசாயத்திற்கு பயன்படக்கூடிய யூரியா உரங்களை பயன்படுத்தி பசைகளை தயாரித்து வந்த தனியார் நிறுவ னத்திற்கு சார் ஆட்சியர் சீல் வைத்தார். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த கணபதி பாளையத்தில் முஸ்தபா என்பவருக்கு சொந்தமான எலைட் சால்வன்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் செயல் பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில், யூரியா உரங்களை பயன்படுத்தி பசைகளை தயாரிப்பதாக பொள்ளாச்சி சார் ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படை யில் அந்த நிறுவனத்தில் புதனன்று இரவில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையில் விவசாயத் திற்கு பயன்படுத்தக்கூடிய யூரியா உர வகைகளை பயன் படுத்தி சுவரொட்டிகள் ஒட்டக்கூடிய பசைகள் தயாரித்து வந்தது கண்டறியப்பட்டது. மேலும், அந்நிறுவனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 45 கிலோ கொண்ட 927 யூரியா மூட்டைகளும் கைப் பற்றப்பட்டது. இதையடுத்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன் அந்நிறுவனத்தை மூடி சீல் வைத்தார். பறி முதல் செய்யப்பட்ட உர மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய் வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையே, விசாரணை நடைபெற்று வந்த நிலை யில், அந்நிறுவனத்தின் உரிமையாளர் முஸ்தபா திடீரென காரில் ஏறி தப்பியோடினார். இதனைத்தொடர்ந்து தப்பி யோடிய முஸ்தபாவை ஆனைமலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.