tamilnadu

img

கொரோனா வைரஸ் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

அரசு ஊழியர்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தல்

நாமக்கல், மார்ச் 16- கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற் படாமல் தடுக்க அரசு அறிவுறுத்தி யுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை அனைத்து துறை அலுவலர்க ளும் கட்டாயம் மேற்கொள்ள வேண் டும் என நாமக்கல், சேலம், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள் ளனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில், கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்படா மல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட அளவிலான அனைத்து துறை அரசு அலுவலர்க ளுக்கான ஆலோசனை கூட்டம் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு முன் னிலையில், மாவட்ட ஆட்சியர் கா.மெ கராஜ் தலைமையில்திங்களன்று நடை பெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட  வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (பொது) செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கோ.மலர் விழி, மகளிர் திட்ட இயக்குநர் இரா.மணி, இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மரு.சாந்தி, துணை இயக்கு நர் (சுகாதாரப்பணிகள்) எஸ்.சோம சுந்தரம் உட்பட அரசுத்துறை அலு வலர்கள் கலந்துகொண்டனர்.

சேலம்

இதேபோல், சேலம் மாவட்ட ஆட்சி யர் அலுவலக கூட்டரங்கில், கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சி யர் சி.அ.ராமன் தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் கூடுதல் இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை நா.அருள்ஜோதி அரசன், சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரெ.சதீஷ், மாவட்ட வருவாய் அலுவ லர் இரா.திவாகர், அரசு மோகன் குமார மங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்து வமனை முதல்வர் ஆர்.பாலாஜிநா தன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) ஜெ.நிர்மல்சன், மாநகர் நல அலுவலர் பார்த்திபன், உணவு பாது காப்பு அலுவலர் கதிரவன், இணை இயக்குநர் (மருத்துவம்) சத்தியா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கோவிநாத், உதவி இயக்குநர் (பேரூ ராட்சிகள்) கே.கனகராஜ் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தருமபுரி

இதேபோல், தருமபுரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் கொரோனா வைரஸ் முன்த டுப்பு  நடவடிக்கைகள் குறித்த  மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம்   மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தலைமையில் நடைபெற்றது.  இக்கூட் டத்தில் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ப.இராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரஹமத்துல்லா கான், அரூர் சார் ஆட்சியர் மு.பிரதாப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் .ஆர்த்தி,  துணை இயக்கு நர் சுகாதாரப் பணிகள் பூ.இரா.ஜெமினி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொ) எம். சிவக்குமார், மண்டல இணை இயக்கு நர் கால்நடை பராமரிப்புத்துறை இராஜேந்திரன், முதன்மை கல்வி அலு வலர் கீதா, மாவட்ட ஆட்சியரின் நேர் முக உதவியாளர் (பொது)கீதாராணி, வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சி யர்கள் தெரிவிக்கையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உரிய அனுமதியின்றி அரசுத்துறை அலுவலர்கள் தங்கள் அலுவலகங்கள் மூலமாக கூட்டங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் வகையிலான நிகழ்ச்சி களை நடத்த கூடாது. அரசுத்துறை அலுவலர்கள் தங்கள் அலுவலகங்க ளில் அலுவலர்கள் மற்றும் பணியா ளர்கள் கைகளை கழுவுவதற்காக சோப் மட்டுமல்லாது கிருமி நாசினி திர வங்களையும் வைத்திருக்க வேண்டும். அரசுத்துறை அலுவலர்கள் துறை ரீதி யாக மற்ற மாநிலங்களில் நடைபெ றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற் காகவோ, திட்டங்களை பார்வையி டவோ உரிய அனுமதி பெறாமல் செல்ல கூடாது. பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் கொரோனா பாதிப்பு உள்ளதால் பள்ளி மற்றும் கல் லூரி நிர்வாகத்தினர் தங்கள் மாணவ, மாணவியர்களை வெளி மாநிலங்க ளுக்கோ, வெளி நாடுகளுக்கோ சுற்றுலா மற்றும் பிற காரணங்களுக் காக அழைத்து செல்ல கூடாது. பொது மக்கள் அதிகம் வரும் அலுவலகங்க ளில் அலுவலக நுழைவு வாயில் பகுதி யில் கைகளை சுத்தம் செய்ய கை கழு வும் அமைப்பை ஏற்படுத்துவதோடு அதற்கு தேவையான பொருட்களை யும் வைத்திருக்க வேண்டும் என தெரி வித்தார்.