பூட்டிய வீட்டில் 80 பவுன் நகை கொள்ளை
பொள்ளாச்சி, மார்ச் 13- பொள்ளாச்சி அருகே பூட்டிய வீட்டில் இருந்து 80 பவுன்நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டி அன்னை சத்யா வீதியை சேர்ந்த வர் தர்மலிங்கம். மளிகைக்டை வைத்துள்ளார். இவர் கடந்த சிலநாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் வெளி யூர் சென்றார். இந்நிலையில், வெள்ளியன்று காலை அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைந்து இருப்ப தைக் அப்பகுதியினர் கண்டனர். இதுதொடர்பாக தர்மலிங்கத்திற்கு தகவல் தெரிவித்தனர். வீட்டிற்கு வந்த தர்மலிங்கம் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ வில் இருந்த பொருட்கள்கலைந்திப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், அதிலிருந்த சுமார் 80 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து காவல் துறையி னர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண் டனர். மேலும், குடியிருப்புகள் நிறைந்த பகுதியுள்ள வீட்டில் மர்மநபர்கள் கொள்ளையடித்த சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் குடும்ப நல நீதிமன்றம் திறப்பு
திருப்பூர், மார்ச் 13 – திருப்பூரில் குடும்ப நல நீதிமன்றத் திறப்பு விழா வெள்ளியன்று நடைபெற்றது. திருப்பூர் லட்சுமி நகரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இந்த நீதிமன்றம் திறந்து வைக்கப்பட் டுள்ளது. திறப்பு விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கே. விஜயகார்த்திகேயன் முன்னிலை வகித்தார். முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.அல்லி தலைமை வகித்து நீதிமன்றத்தை திறந்து வைத்தார். பிற நீதி மன்றங்களின் நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள் உள்பட பலர் உடனிருந்தனர். திருப்பூரில் குடும்ப நல வழக்குகள் இதுநாள் வரை முதன்மை மாவட்ட நீதிமன்றம், முதலாவது கூடுதல் முதன்மை மாவட்ட நீதிமன்றம், தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், முதன்மை சார்பு நீதிமன்றம், கூடு தல் சார்பு நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களில் விசா ரிக்கப்பட்டு வந்தன. தற்போது தனியாக குடும்ப நல நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ள காரணத்தால் மேற்கூ றப்பட்ட நீதிமன்றங்களில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் குடும்ப நலம் சார்ந்த வழக்குகள் புதிதாக திறக்கப்பட்டுள்ள குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றப்படவுள்ளன. இதன் மூலம், நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் புதிய வழக்குகளில் விரைவாக தீர்வு காண இயலும் சூழல் ஏற்பட்டுள்ளது.
திருச்செங்கோடு சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - ரூ.4.86 லட்சம் பறிமுதல்
திருச்செங்கோடு, மார்ச் 13- திருச்செங்கோடு சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீ சார் நடத்திய சோதனையில், கணக் கில் வராத ரூ.4.86 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள புதிய கட்டிடத்தில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் வியா ழனன்று இரவு லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையி லான போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அலுவலகத்தில் சார் பதி வாளர் தமிழ்செல்வன் மற்றும் பத்திர எழுத்தர்கள், புரக்கர்கள் என 10க்கும் மேற்பட்டோர் இருந்தனர். அவர்களி டம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அலுவலகத்தில் அதிகாரிகள் விடிய, விடிய நடத்திய சோதனை அதி காலை 5 மணியளவில் முடிந்தது. சோதனை முடிவில் கணக்கில் வராத ரூ.4 லட்சத்து 86 ஆயிரத்து 400 கைப் பற்றப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில் இந்து முன்னணி, பிஎப்ஐ பிரமுகர்கள் தாக்கப்பட்ட சம்பவம்- மூவர் கைது
கோவை, மார்ச் 13– கோவையில் இந்து முன்னணி மற்றும் பிஎப்ஐ பிரமுகர் அடுத்தடுத்து தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்பு டைய இருதரப்பை சார்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கோவையில் கடந்த வாரம் இந்து முன்னணி பிரமுகரான ஆனந்த் என்ப வர் இருசக்கர வாகனத்தில் வந்த போது இருவரால் தாக்கப்பட்டார். இத னைத்தொடர்ந்து கோவை ராம்நகரில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்பை சார்ந்த இக்பால் என்பவரை ஏழுபேர் கொண்ட கும்பல் தாக்கியது. அடுத்தடுத்து நடைபெற்ற இச்சம்பங்கள் தொடர்பாக கோவை யில் அசாதாரண சூழல் நிலவியது. இதையடுத்த மாநகரின் அச்சத்தை போக்கி அமைதியை கொண்டுவர காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கை வலுவாக எழுந்தது. இந்நிலையில் இந்து முன்னணி நிர்வாகி ஆனந்த் தாக்கப்பட்ட சம்பவத் தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நூர்முகம்மது என்பவர் கைது செய்யப் பட்டார். இதைத்தொடர்ந்து வெள்ளி யன்று அசாரூதின் என்பவர் கைது செய் யப்பட்டார். இதேபோல் பிஎப்ஐ அமைப்பை சேர்ந்த இக்பால் தாக்கப் பட்ட சம்பவத்தில் இந்து முன்ன ணியை சேர்ந்த சதீஷ்கண்ணன் மற்றும் ராகுல் ஆகிய இருவர் பிடிபட்டுள்ள னர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஏழு பேர் ஈடுபட்ட நிலையில், தற்போது கைது செய்யப்பட்டவர்களிடம் விசா ரணை மேற்கொண்டு மற்றவர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற் கொள்ள உள்ளதாக காவல்துறை வட் டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த 2 ஆம்தேதி சிஏஏ ஆதரவு போராட்டம் நடைபெற்ற போது ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவ ரது சகோதரரை தாக்கியதாக இந்து முன்னணி மாநில செயற்குழு உறுப்பி னர் குணா என்பவர் மீது காவல்துறை யினர் தற்போது வழக்குப்பதிவு செய் துள்ளனர்.