திருப்பூர், பிப். 26- திருப்பூர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப் பாக வைப்பதற்கான பாதுகாப்பறை கட் டும் பணியினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், காங்கேயம், அவிநாசி, திருப்பூர் (வடக்கு), திருப்பூர் (தெற்கு), பல்லடம், உடுமலைப் பேட்டை மற்றும் மடத்துக்குளம் ஆகிய எட்டு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த எட்டு சட்ட மன்ற தொகுதிகளில் நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்ற தேர் தல்களின் போது பயன்படுத்தப்படும் மின் னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான நிரந்தர பாதுகாப்பறை அமைக்க முடிவு செய்யப் பட்டது. இதன்படி மாவட்ட ஆட்சியர் அலு வலக பெருந்திட்ட வளாகத்தில் ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த இடத்தில் அறை கட்ட இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெறப் பட்டு சென்னை தலைமை தேர்தல் அலுவலரால் ரூ.4.95கோடி நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய, நிரந்தர மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பறை கட்டுவதற்கான பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்தி கேயன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது, மாவட்ட வரு வாய் அலுவலர் ஆர்.சுகுமார், திருப்பூர் மாநகராட்சி ஆணையர் சிவகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சாகுல்ஹமீது, திருப்பூர் வருவாய் கோட் டாட்சியர் கவிதா, தனி வட்டாட்சியர் (தேர்தல்) ச.முருகதாஸ், திருப்பூர் (தெற்கு) வட்டாட்சியர் சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.