விவசாயிகளின் மீது வழக்கு தொடுத்த பெப்சி நிறுவனத்தை கண்டித்து கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் செவ்வாயன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி வாயில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெப்சி நிறுவன பொருட்களை இந்தியாவில் தடைசெய்ய வேண்டும். விவசாயிகளின் மீது தொடுக்கப்பட்ட வழக்கை பெப்சி நிறுவனம் உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக பெப்சி நிறுவன உற்பத்திப் பொருட்களை தரையில் வீசி மாணவர்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.