tamilnadu

img

மக்கள் மனங்களை வென்று காட்டியிருக்கிறோம் பொள்ளாச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

கோவை, ஜூன் 13– மக்களிடம் செல், மக்கள் மனங்களை வெல் என்பதற்கு ஏற்ப மக்களிடம் சென்று, வென்று காட்டி யுள்ளோம் என பொள்ளாச்சியில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.  திமுக சார்பில் கலைஞர் பிறந்த நாள் மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடக்கிபாளையம் பிரிவில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகை யில், “நடந்து முடிந்த நாடாளு மன்ற மற்றும் 22 சட்டமன்ற இடைத் தேர்தல்களில் வாக்களித்தவர் களுக்கு மட்டுமல்ல, வாக்கைப்  பதிவு செய்யாமல் தவறிவிட்டவர் களுக்கும் நாம் பணியாற்றப் போகின்றோம். வாக்குக் கேட்க ஓடோடி வந்ததைப்போல, இப்போது நன்றி சொல்லவும் ஓடோடி வந்தி ருக்கின்றேன். கோவையில் பி. ஆர்.நடராஜன், திருப்பூர் கே.சுப்பா ராயன், பொள்ளாச்சி சண்முக சுந்தரம், நாமக்கல் சின்ராஜ், ஈரோடு கணேசமூர்த்தி, கரூர் ஜோதிமணி ஆகியோரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த  வாக்காளர்களுக்கும், தமிழகம் முழுவதும் உள்ள வாக்காளர் களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்று சொல்லிக்கொண்டு இருந்ததை முறியடித்து மிகப்பெரிய வெற்றி யைப் பெற்றுள்ளோம். இனி அதிமுகவிடம் ஏமாறமாட்டோம் என மக்கள் திமுகவிற்கு வாக்களித்துள்ள னர்” என்றார். மேலும் அவர் பேசுகையில், “சதியின் காரணமாக வேலூர் தொகுதியில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேனி தொகுதி யில் வெற்றிபெற கோடிக்கணக்கான ரூபாய் அதிமுகவினர் வாரி இறைத் தார்கள். 22 சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் 13 இடங்களில் வெற்றி பெற்று இருக்கின்றோம். ஆளும் கட்சி வெறும் 9 இடங்கள் மட்டுமே  பெற்றுள்ளது. புதுச்சேரி உள்ளிட்ட 38 நாடாளுமன்ற தொகுதி யும், ஆளும்கட்சியான அதிமுக வசம் இருந்து 12 சட்டமன்ற தொகுதி யையும் நாம் வென்று காட்டியுள் ளோம். நாடாளுமன்றத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்றும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியவில்லை என்று ஊடகங்களில் தலையங்கம், கட்டுரைகள் எழுதுகின்றனர். ஆனால், விரைவிலே ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்து அந்தக் கவலையையும் போக்குவோம்” என்றும் கூறினார். தமிழகத்தில் 8 வருடமாக மக்கள் பல துன்பங்களுக்கு உள்ளாகி இருக்கின்றனர். தண்ணீருக்காகக் குடங்களோடு சாலையில் அலையும் நிலை இருக்கின்றது. திமுகவினர் மக்களிடம் நேடியாகச் சென்று குறை களைக் கேட்டு, அதை அதிகாரி களின் கவனத்திற்குக்  கொண்டு சென்று தீர்க்க வேண்டும். அரசியல் வாதிகளை தேடி மக்கள் வரக் கூடாது, மக்களைத் தேடி அரசியல்வாதிகள் செல்ல வேண்டும் என்ற நிலை இப் போது ஏற்பட்டுள்ளது. நாடாளு மன்றத் தேர்தலில் கொடுத்த மரண அடியை, மீண்டும் உள்ளாட்சி தேர்தல் அல்லது சட்டமன்ற தேர் தல் எதுவாக இருந்தாலும் அதில் கொடுப்போம்.  இரண்டாவது முறையாக மோடி பிரதமராக  பதவி ஏற்ற பின்னர், புதிதாக ஹைட்ரோ கார்பன் திட்டத் திற்காக கிணறுகள் தோண்டத் தொடங்கி விட்டனர். 8 வழிச்சாலை அமைக்க முயல்கின்றனர். கூடங் குளத்தில் அணுக் கழிவு சேமிக்கும் முயற்சி நடக்கின்றது. கடந்த ஆண்டு 2 மாணவிகள், இந்த ஆண்டு 3  மாணவிகள் நீட் தேர்வால் உயிரிழந்  துள்ளனர். இதேபோல், பேரறிவா ளன் உட்பட 7 பேர்  விடுதலை விவ காரத்தில் மத்திய, மாநில அரசுகள்  கண்ணாமூச்சி  விளையாடுகின்றது. போக்குவரத்து நெரிசல் எல்லா இடங்களிலும்  இருக்கும்போது சேலத்தில் மட்டும் 8 வழிச்சாலைக்கு முதல்வர் ஆர்வம் காட்ட என்ன  காரணம்? ரூ.3000 கோடி கமிஷ னைப் பெறுவதற்காகவே 8 வழிச்சாலை திட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆர்வம் காட்டுகின்றார்.  அதேபோல் பொள்ளாச்சி பாலி யல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை யில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக பார் நாகராஜன் இப்போது சிறிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எப்படி தேர்தல் நேரத்தில் உறுதி  கொடுத்தேனோ, ஆட்சிக்கு வந்த பின்னர் பொள்ளாச்சிக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைப்பதுதான் முதல் கடமை.  தமிழகத்தில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும்போது, சட்டமன்றத்தை ஏன் இன்னும் கூட்ட வில்லை? சட்டமன்றத்தை கூட்ட ஏன் தயங்குகின்றனர்? தேர்தல் முடிந்த பின்பும் சட்டமன்றத்தைக் கூட்ட தயங்குகின்றனர். பொறுமையாகக் காத்திருக்கின்றோம். நல்லது விரைவில் நடக்கப் போகிறது. எந்த நம்பிக்கையுடன் எதிர்பார்ப்புடன் வெற்றியைத் தேடிக் கொடுத்தீர் களோ, அதற்கு நன்றியை தெரி வித்துக் கொள்கின்றேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். முன்னதாக, இந்த பொதுக் கூட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அ.ராசா, ஈரோடு நாடாளு மன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, பொள்ளாச்சி நாடாளு மன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தோழமைக் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.