கோவை, ஜன. 12 – குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் மனித சங்கிலி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்களை மதரீதியாக பிரிக்கும் மத்திய மோடி அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. கோவையிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சிஏஏ, என்ஆர்சி, என்ஆர்பியை கண்டித்து ஒப்பணக்கார வீதியில் மனித சங்கிலி நடைபெற்றது.கோவை அத்தார் ஜமாத் அமைப்பினர் நடத்திய மனித சங்கிலிபோராட்டத்தில் ஆயிரத்தி ற்கும் மேற்பட்டோர் தேசிய கொடியை ஏந்தி கைகோர்த்து நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றனர். இதேபோல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மதச்சார்பின்மை காக்கும் மக்கள் ஒற்றுமை போராட்டம் கரும்புக் கடையில் நடைபெற்றது. இதில் தமுமுக மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹி ருல்லாஹ், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றி னர்.