கோவை, ஜூலை 6- தமிழகத்தில் சென்னை உயர் நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்ற கிளை மற்றும் மாவட்டங்களில் உள்ள சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் வருகின்ற ஜூலை 13 ஆம் தேதி (சனியன்று) மக்கள் நீதிமன்றம் நடத்தப்படவுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற மக்கள் நீதிமன்றத்தில், உயர்நீதிமன்ற நீதிபதி, ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி மற்றும் ஒரு உறுப்பினர் கொண்ட அமர்வு முன்னிலை யில் வழக்குகள் நடைபெறும். இந்த மக்கள் நீதிமன்றத்தில் சாலை விபத்துகளில் இழப் பீடு சம்மந்தப்பட்ட நிலுவையிலுள்ள மேல் முறையீட்டு வழக்குகள், மின்சார பயன் பாடு, வீட்டுவரி, தண்ணீர் வரி, ஓய்வூதியம் சம்மந்தமான ரிட் மனுக்கள், செக்மோசடி, மணவிலக்கு தவிர்த்த குடும்ப நல வழக்கு கள், ஜீவனாம்சம், நில ஆர்ஜித வழக்கு கள், தொழிலாளர் நலன், இழப்பீடு வழக் குகள் மற்றும் இதர பொது பயன்பாடு வழக்குகள் போன்றவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதில் வழக்கா டுபவர்கள் நேரடியாக பங்கு பெற்று வழக் குகளை சமாதானமாகவும், விரைவாக வும் முடித்துக் கொள்ள மக்கள் நீதிமன் றம் வாய்ப்பளிக்கிறது. மேலும், மக்கள் நீதிமன்றங்கள், இழப் பீட்டுத் தொகை மற்றும் பிற பிரச்சனை களில் இருதரப்பினர் சம்மதத்துடன் விரை வில் தீர்க்க வழிவகை செய்கின்றது. இதில் வழக்காடுபவர்களோ அவர்களின் சார்பில் வழக்கறிஞர்களோ, வருகின்ற ஜூலை 8 ஆம் தேதிக்குள் செயலாளர், உயர்நீதி மன்ற சட்டப்பணிகள் குழு, மாற்றுமுறை தீர்வு மைய கட்டிடம், முதல் மாடி, வடக்கு கோட்டை சாலை, உயர்நீதி மன்ற கட்டிட வளாகம், சென்னை – 600 104 என்ற முகவரியிலோ, 044 - 2534 2834, 1800 4252 441 என்ற எண்ணிலோ தங்களது விருப்பத்தினை தெரிவிக்கலாம். மேலும், அந்தந்த மாவட்டங்களில் நடை பெறும் மக்கள் நீதிமன்றங்கள் மூலம் தங்கள் வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காணலாம் என சென்னை உயர்நீதி மன்ற சட்டப்பணிகள் குழுவின் செயலாளர் தெரிவித்துள்ளார்.