கோவை, செப்.19- கோவை, திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படு வோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பரிசோதனை முடிவுகளை விரைவாக வெளியிட பி.ஆர்.நடராஜன் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், தமிழக சுகாதாரத் துறை செயலாளருக்கு அனுப்பியுள்ள கடி தத்தில் கூறியிருப்பதாவது, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சமீப நாட்க ளாக கொரோனா வைரஸ் தொற்று மிக அதிகளவில் பரவி வருகிறது. கோவை மாவட்டமும், திருப்பூர் மாவட்டம் சிறு தொழில்கள் நிறைந்த நகரங்களாகும்.
தற்போது வெளியூர், வெளி மாநில தொழி லாளர்கள் திரும்ப வந்து சேர்ந்துள்ளார் கள். மேலும் கால நிலை மாற்றம் ஏற்பட்டு மழை பெய்து சுற்றுச்சூழலில் ஈரப்பதம் அதிகரித்திருப்பதால் பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் அதிகரித்துள்ளது.
அதே சமயம் கொரோனா தொற்றுக்கு ஆளான வர்களுக்கு சிகிச்சை அளிப்பது, சுகாதார வசதியைப் பராமரிப்பது போன்றவற் றில் மாவட்ட நிர்வாகமும், சுகாதரத் துறையும் மிக மோசமான தோல்வியைச் சந்தித்து வருகின்றன.
அத்துடன் நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதில் மாவட்ட நிர்வாகம் தோல்வி அடைந்து விட்டது. குறிப்பாக, திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு அறி வித்திருந்தாலும், அங்கு போதிய மருத்து வர்கள், மருத்துவக் கட்டமைப்பு உள் ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. கழிப்பிடம் உள்ளிட்ட நோயாளிக ளுக்குத் தேவையான வசதிகள் அவல மான நிலையில் உள்ளன.
மேலும், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்து வதில் மருத்துவப் பரிசோதனையை அதி கப்படுத்துவது மிகவும் முக்கியம் என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்துகி றது. திருப்பூர் மாவட்டத்தில் நாளொன் றுக்கு 2500 பரிசோதனை மட்டுமே செய்யப்படுகிறது.
6 ஆயிரம் பரிசோ தனை செய்தால் ஓரளவுக்கு நோயாளி களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடி யும். நோயை கட்டுப்படுத்த முடியும். தனி யார் பரிசோதனை மையங்களில் சில மணி நேரங்களிலேயே மருத்துவ பரிசோ தனை முடிவுகள் அறிவிக்கப்படுகி றது. ஆனால், அரசு மருத்துவ பரிசோத னைகளின் முடிவுகள் இரண்டு, மூன்று நாட்கள் காலதாமதம் செய்யப்படுகிறது.
இதன் விளைவால் பரிசோதிக்கப்பட்ட வர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகு கிறார்கள். மேலும், கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டறியப்படாத சூழலில் பக்க விளைவுகள் இல்லாத நோய் தடுப்பாற் றலை அதிகரிக்கும் சித்த, ஹோமியோ தடுப்பு மருந்துகள் தேவையான அள வுக்கு கிடைக்கவும், அனைத்து பகுதி மக்க ளுக்கும் இந்த தடுப்பு மருந்து கொடுக்க வும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
எனவே, தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு சிறப்பு கவனம் செலுத்து வேண்டும். இவ்வாறு பி.ஆர்.நடராஜன் எம்.பி., அக்கடிதத் தில் வலியுறுத்தியுள்ளார்.