கோவை, ஜூன் 29- டாஸ்மாக் நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ள நிலையில் இத்தேர்வில் வெற்றி பெறுவதற்காக சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கம் இலவச பயிற்சி முகாமை சனியன்று கோவையில் துவக்கியது. டாஸ்மாக் நிறுவனத்தில் காலமுறை ஊதியமின்றி மதுக்கடைகளில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் என சிஐடியு சங்கம் தொடர்ச்சியான போராட்டத்தை நடத்தி வருகிறது. மேலும் டாஸ்மாக் நிறுவனத்தில் உள்ள பணிடங்களை இவ்வூழியர்களை கொண்டே நிரப்ப வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளது. தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான அழுத்தத்தையடுத்து தற்போது தமிழகம் முழுவதும் 500 இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் பணியில் அமர வேண்டும் என்பதற்காக சிஐடியு டாஸ்மாக் ஊழி யர் சங்கம் பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன் ஒருபகுதியாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இலவச பயிற்சி மையத்தடன் இணைந்து கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் இலவச பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளது. இதற்கான துவக்க விழா சனியன்று ரயில்நிலையம் அருகே உள்ள தனியார் உணவக கூட் டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிஐடியு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ் மூர்த்தி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஜான் அந்தோணி ராஜ் வரவேற்புரையாற் றினார். செந்தில்பிரபு, தங்கராஜ், முத்து விஜய் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். இலவச பயிற்சி வகுப்பை தமிழ்நாடு வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் எம்.எஸ். கலைவாணி துவக்கி வைத்து உரை யாற்றினார். சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ் ணமூர்த்தி வாழ்த்திப் பேசினார். முன்னதாக தேர்வுகளை எதிர்கொள்ளும் விதம் குறித்து அம்பேத்கர் கல்வி பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கணேஷ் மற்றும் ஆசிரியர்கள் சோமசுந்தரம், ரவிசங்கர் ஆகியோர் உரை யாற்றினர். முடிவில் டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் எஸ்.ராமகிருஷ்ணன் நன்றி கூறினார். இந்த இலவச பயிற்சி வகுப்புகள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய இரண்டு மாதங்கள் சனி மற்றும் ஞாயிற்று கிழமை களில் காட்டூர் பகுதியில் உள்ள சிஐடியு மில் தொழிலாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
அசோக் குடும்பத்திற்கு நிதியுதவி
முன்னதாக, இந்த பயிற்சி முகாமில், நெல்லையில் சாதிய வெறியர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் அசோக் குடும்பத்திற்கு நிதியுதவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பயிற்சி முகாமில் பங்கேற்ற டாஸ்மாக் ஊழியர்கள் தங்களிடமிருந்த நிதியை முன்வந்து அளித்தனர். இதில் மொத்தம் ரூ.4,200 வசூலான நிலையில் அதனை சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஸ்ணமூர்த்தியிடம் ஒப்படைத்தனர்.