tamilnadu

img

ஊரடங்கு காலத்தில் நுண் நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்ட கடனுக்கு வட்டி வசூலிக்கக் கூடாது

நுண் நிதி நிறுவனங்களின் அடாவடியான கடன் வசூலை நிறுத்திடவும்,  ஊரடங்கு காலத்தில் நுண் நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்ட கடனுக்கு வட்டி வசூலிக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோவையில் 14 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டங்களில் மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.ராதிகா, நிர்வாகிகள் ராஜலட்சுமி, பங்கஜவள்ளி, வனஜா நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று கோரிக் ைகளை வலியுறுத்தி  முழக்கங்களை எழுப்பினர்.