கோவை, அக்.13- உடுமலையில் புதிய பட்டுக்கூடு அங்காடி துவங்கப்பட உள்ளதால் பட்டு விவசாயிகள் மகிழ்ச்சிய டைந்துள்ளனர். பட்டு விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் மகசூல் செய்த பட்டுக் கூடுகளை அரசு பட்டுக்கூடு அங்கா டிக்கு விற்பனைக்காக கொண்டு செல் வர். அங்கு வரும் நூற்பாளர்கள் விவ சாயிகளிடம் இருந்து பட்டுக்கூடுகளை வாங்கி அதனை பட்டுநூலாக திரித்து விற்பனை செய்கின்றனர். தொடர்ந்து பட்டாடைகள் தயாரிக்கப்படுகிறது. அரசு பட்டுக்கூடு அங்காடியில் நடை பெறும் இந்த வர்த்தக்கத்திற்காக விவ சாயிகள் மற்றும் நூற்பாளர்கள் இணைந்து அரசுக்கு 1.5 சதவிகிதம் லெவி கட்டணம் செலுத்தி வருகின்ற னர். இதனால் அரசுக்கு லட்சக்கணக் கில் வருவாய் கிடைத்து வருகிறது. அவ்வாறு தமிழகம் முழுவதும் 20 பட்டுக்கூடு அங்காடிகள் செயல்பட்டு வருகிறது. இதில், கோவையில் பாலசுந்தரம் சாலையில் அரசு பட்டுக்கூடு அங்காடி செயல்பட்டு வருகிறது. அன்னூர், சத்தியமங்கலம், தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி மற்றும் உடுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளை சேர்ந்த பட்டு விவசாயிகள் மாதந்தோறும் மகசூல் செய்யும் கூடுகளை இந்த அங்காடிக்கு கொண்டு வந்து விற் பனை செய்து வந்தனர். இதனால் விவ சாயிகளுக்கு போக்குவரத்து செலவு மற்றும் அலைச்சல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், உடுமலை மடத்துக் குளம் வட்டாரத்தில் உள்ள மைவாடி பகுதியில் புதிய அரசு பட்டுக்கூடு அங் காடி அமைய உள்ளது. இதுகுறித்து பட்டுவளர்ச்சித்துறை யினர் கூறுகையில், உடுமலை சுற்று வட்டாரப்பகுதிகளில் மட்டும் 1,500க்கும் மேற்பட்ட பட்டு விவசாயி கள் உள்ளனர். இங்கு ஏற்கனவே நடமாடும் பட்டுக்கூடு அங்காடி செயல்பட்டு வந்தது. சில விவசாயிகள் கோவை மற்றும் தருமபுரி பகுதிகளில் உள்ள அங்காடிக்கு சென்று விற்பனை செய்து வந்தனர். இந்த நிலையில், மைவாடி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பட்டு பண்ணையில் புதிய பட்டுக்கூடு அங்காடி துவங்க உள் ளது. அடுத்த வார இறுதிக்குள் இந்த அங்காடி திறக்கப்படும் என்று எதிர் பாக்கிறோம் என்றனர். இந்த புதிய பட்டுக்கூடு அங்காடி யால் உடுமலை மற்றும் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப்பகுதி விவசாயிக ளுக்கு பணச்செலவு மற்றும் அலைச்சல் குறையும் என்பதால் விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர். மேலும், மற்ற பகுதிகளில் செயல்பட்டு வரும் அங்காடிகளை போலவே கூடுகளுக்கு நல்ல விலை கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.