அவிநாசி, செப். 27- அவிநாசி அருகே வீசிய பலத்த காற்றில் பழமை வாய்ந்த வேப்பமரம் முறிந்தது. அவினாசி ஒன்றியம், தண்டுக்காரன்பாளையம் ஊராட்சியில் அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் அருகே பழமைவாய்ந்த வேப்பமரம் உள்ளது. இங்கு வியாழனன்று இரவு வீசிய பலத்த காற்றின் காரணமாக வேப்பமரத்தின் ஒரு பகுதி முறிந்து மின்சார கம்பியின் மேல் சாய்ந்து சாலை ஓரமாக விழுந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அலு வலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு. முறிந்த மரத்தின் பாகங்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.