tamilnadu

img

சாலை பணி துவங்குவதற்கு முன்பே பெயர் பலகை

அவிநாசி, ஆக. 4 - அவிநாசி ஒன்றிய கிராமப்புற ஊராட்சிகளில் சாலை பணி கள் தூங்குவதற்கு முன்பு பல் வேறு பகுதிகளில் வேலை நடை பெற்றுக் கொண்டிருப்பதாக பெயர் பலகை வைக்கப்பட்டுள் ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட் பட்ட பழங்கரை, கருவலூர் ஊராட்சி அனந்தகிரி  மயானத்தில் இருந்து வேட்டுபாளையம் ஊராட்சி எல்லைவரை ஒன்றரை  கிலோ மீட்டருக்கு தார்சாலை  போடுவதற்காக மண் நிரப்பப் பட்டு, கற்களும் கொட்டப்பட்ட நிலையில் உள்ளது. 3 வருடங்கள்  ஆகியும் வேலை துவங்கவில்லை.  இதுபோன்ற பல பணிகள் கிடப் பில் போடப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந் நிலையில் செம்பியநல்லுார் ஊராட்சியில் 2018 – 19 நிதி யாண்டுக்கான 14ஆவது நிதிக் குழு மானியத்தில், 8.81 லட்சம் ரூபாய் செலவில் சென்னமலைக் கவுண்டம் புதுார் துவங்கி, ஸ்ரீராம் நகர் வரையுள்ள தார் ரோடு புதுப்பிக்கும் பணி நடந்து வருகி றது என்ற அறிவிப்பு பலகை சாலையின் முகப்பில் வைக்கப் பட்டது. நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள தால் பணிகள் நிறுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், தேர்தல் முடிந்து பல மாதம் கடந்தும் சாலை அமைக்கும் பணி துவங்கவில்லை. இதனால், அதிருப்தியடைந்துள்ள பொது மக்கள் சிலர் கூறியதாவது; பல ஆண்டாக பராமரிப்பில்லாமல் உள்ள சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு விட்டது. விரை வில் பணி துவங்கிவிடும் எனக் கூறி தான், எங்களிடம் ஓட்டு சேக ரித்தனர். ஆனால், சாலை பணி  நடந்து வருவதாக வைக்கப்பட் டுள்ள அறிவிப்பு பலகையில் உள்ள எழுத்துக்கள் கூட அழிய துவங்கி, அந்த அறிவிப்பு பலகையே விழும் நிலையில் உள்ளது. ஆனால், பணி துவங்கிய தாக தெரியவில்லை. இது மக் களை ஏமாற்றும் செயலாகவே உணர்கிறோம் எனத் தெரிவித் தார்கள். இதுகுறித்து ஊராட்சி ஒன் றிய ஆணையாளர் சாந்திலட் சுமியிடம் கேட்ட போது, பணி துவங்குவதற்கு முன், அதுதொடர் பான அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்பது உத்தரவு. அதன்படி அறிவிப்பு வைக்கப்பட் டுள்ளது. மேலும் டெண்டர் விடப்பட்டு விட்டது. எனவே பணி விரைவில் துவங் கும் எனத் தெரிவித்தார்.