tamilnadu

நாமக்கல் ,சேலம் , தருமபுரி முக்கிய செய்திகள்

ஈமு பார்ம்ஸ் நிறுவன சொத்துகள் ஏலம்

நாமக்கல், செப்.25- ஈமு பார்ம்ஸ் அசையா சொத்துகள் பொது ஏலம்  விடப்பட உள்ளதாக நாமக்கல் மாவட்ட பொருளாதார  குற்றப்பிரிவினர் அறிவித்துள்ளனர்.  நாமக்கல் மாவட்டம், செல்லம் ஈமு பார்ம்ஸ் மற்றும்  வேலவன் கார்டன் சிட்டி டெவலப்மென்ட்ஸ் என்ற ஈமு நிறுவனத்தின் மீது  பொருளாதார குற்றப்பிரிவில்  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சட்ட  நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகின்றது.  இந்நிலையில்,  ஈமு நிறுவனத்தின் அசையா சொத்து களான பரமத்தி வேலூர் வட்டம் பிள்ளைகளத்தூர் கிராமத்தில் 2360 சதுரடிகள் கொண்ட இரண்டு  வீட்டுமனைகள் (தலா மதிப்பு ரூ.11லட்சம்) மற்றும்  இராசிபுரம் வட்டம் காட்டூர் காட்டுக்கொட்டாய் கிராமத்தில் 3,716 சதுரடி (மதிப்பு ரூ.25 லட்சம்) கொண்ட ஒரு வீட்டுமனையும் அரசின் கட்டுப் பாட்டில் உள்ளது. இந்த சொத்துகளை வரும் செப்.27 ஆம் தேதியன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் மாடியில் தகுதி பெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.   ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள  அனைவரும் காலை 10 மணியளவில் திரும்பித் தரக்கூடிய பிணை வைப்புத் தொகையாக  ஒவ்வொரு  வீட்டுமனைக்கும் அவற்றிற்கான  அடிப்படை ஏலத் தொகையில் 10 சதவிகிதம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஏதேனும் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் CHELLAM EMU FARMS Cr.No.133/2013/DRO/NAMAKKAL payable at Namakkal என்ற பெயரில் வரைவோலை செலுத்தி பொது ஏலத்தில் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தறி தொழிலாளி மீது போலீசார் தாக்குதல் சிகிச்சையளிக்க மருத்துவமனை மறுப்பு- முற்றுகை

சேலம், செப்.25- காவலர் தாக்கி காயமடைந்த தறி  தொழிலாளிக்கு சிகிச்சை அளிக்க மறுத்த  அரசு மருத்துவமனையை, அவரது உற வினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.    சேலம் மாவட்டம், வேம்படிதாளம் அருகே உள்ள நடுவனேரி குழந்தான்வளவு பகுதியை சேர்ந்தவர் தறி தொழிலாளி செல்வராஜ் (54). இவரும், இவரது நண்ப ரான கோட்டை புதூர் பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் தமிழ் (30) ஆகிய இருவரும் புதனன்று அருகிலுள்ள மதுக் கடைக்கு சென்றுள்ளனர். அப்போது, அவ் வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கொண்டலாம்பட்டி காவல் நிலைய காவ லர்கள்,  செல்வராஜ், தமிழ் ஆகிய இரு வரையும் சரமாரியாக லத்தியால் தாக்கிய தாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்த  தமிழ்,  சேலத்திலுள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதேநேரம், செல்வராஜ் வேம்படிதாளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்துள்ளார். ஆனால், அங்கு 2 மணி நேரத்திற்கு மேலாக செல்வ ராஜை வராண்டாவில் படுக்க வைத்து  சிகிச்சை அளிக்காமல் மருத்துவமனை பணி யாளர்கள் மெத்தனம் காட்டியுள்ளனர். இதனை கண்டித்து அவரின் உறவினர்கள்  அரசு மருத்துவமனையை முற்றுகை யிட்டனர். இதனால் மருத்துவமனை வளா கத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற் பட்டது.

பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

நாமக்கல், செப்.25- தீபாவளி பண்டிகை யையொட்டி, பட்டாசு கடை வைப்பதற்கு வரும் செப்.28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியி ருப்பதாவது,  தீபாவளி பண்டிகையன்று பட் டாசுகள் விற்பனை செய் திட ஏதுவாக, பண்டிகைக்கு 30 நாள்களுக்கு முன்பாக தற்காலிக உரிமம் வழங் கப்படும்.  இதற்காக விண் ணப்பங்களை இணைய வழியாக சமர்ப்பிக்க அறிவு றுத்தப்படும்.  நிகழாண்டில், தீபாவளிக்கு பட்டாசு விற் பனை செய்திட ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.  அதற்கான கால அவ காசம் முடிந்து விட்ட நிலையில்,  நாமக்கல் மாவட் டத்தில் இணையவழி மூலம் விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை தங்க ளுக்கு குறிப்பிட்ட கால வரையறை தெரியவில்லை என்றும்,  இணையவழி மூலம் விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து வழங்குமாறும் வணிகர்கள் தரப்பில் கோரிக்கை வைக் கப்பட்டது.  அதனடிப்படை யில், தற்காலிக உரிமத் திற்கு விண்ணப்பம் செய்ய  இயலாத வணிகர்கள்  மற்றும் விற்பனையாளர் களின் கோரிக்கையை ஏற்று,  இணையவழியில் விண்ணப்பம் செய்ய வரும் 28-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது.  இதனை பட்டாசு விற்ப னையாளர்கள் அனை வரும் பயன்படுத்திக் கொள் ளலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சாலையோரத்தில் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

தருமபுரி, செப்.25 - அரூர்-தருமபுரி சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணிகள்  புதனன்று தொடங்கப்பட்டன.  அரூர்-தருமபுரி நெடுஞ்சாலையோரங்களில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டுள்ளன. இதை யடுத்து, சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணியை  கண்காணிப்பு பொறியாளர் ஜெ.கண்ணன் துவக்கி வைத்தார். நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெறும் சாலை விரிவாக்கப் பணிகள், சீரமைப்பு பணிகளின் தரம் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார்.  இந்த ஆய்வின் போது கோட்டப் பொறியாளர் ஆர்.என். தனசேகரன், உதவி கோட்டப் பொறியாளர் என்.ஜெய் சங்கர்,  இளநிலை பொறியாளர் ஏ.பாஸ்கரன் உள்ளிட் டோர் கலந்துகொண்டனர். 

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள்  ஊதியம் கேட்டு ஆட்சியரிடம் மனு

தருமபுரி, செப்.25-  ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு  மாத ஊதியம் வழங்கக்கேட்டு, தரும புரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் மனு அளித் தனர். தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தி லுள்ள சுந்தரவல்லி ஊராட்சி மற்றும் லிங்கநாயக்கன அள்ளி  ஊராட்சியில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு ஊராட்சி மூலம் ரூ.2,540  ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 7 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ஆகவே, ஊதியம் வழங்குமாறு தொடர்ந்து அதிகாரிகளிடம் மனு அளித்தனர். ஆனால்  இதுவரை ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப் படவில்லை. எனவே குடிநீர் மேல்நிலைத் தொட்டி இயக்கு பவர்களுக்கு மாத சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கு மாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வலியுறுத்தினர்.

மொரப்பூர்: பள்ளி விடுதியில் குடிநீர் தட்டுப்பாட்டால் மாணவிகள் அவதி

 தருமபுரி, செப்.25- மொரப்பூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் பள்ளி மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், மொரப்பூரில் உள்ள  அரசு ஆதி திராவிடர் மாணவியர் விடுதியில் 60 பேர் தங்கிப் படித்து வருகின்றனர். இதில் சிட்லிங், ஏ.கே.தண்டா, எஸ். தாதம்பட்டி, கோட்டப்பட்டி, டி.அம்மாபேட்டை, கம்பை நல்லூர் உள்ளிட்ட தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த  ஏழை மாணவிகள் ஆவார். இந்நிலையில், இங்குள்ள அரசு  மாணவியர் விடுதிக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர்  திட்டத்தில் இருந்து குடிநீர் இணைப்பு வழங்கப்பட வில்லை. அதேபோல், மொரப்பூர் கிராம ஊராட்சி நிர் வாகம் சார்பில் வழங்கப்பட்டு வந்த குடிநீர் இணைப்புகள் அண்மையில் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், விடுதியில் தங்கி இருக்கும் மாணவிகள் நாள் தோறும் குடிநீர் மற்றும் கழிப்பிடத் தேவைக்காக பல் வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.  இதன் காரணமாக பள்ளி மாணவிகள் விடுதியை விட்டு  வெளியில்  சென்று விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து  வந்து பயன்படுத்தி வருகின்றனர். எனவே, மொரப்பூர் கிராம ஊராட்சி நிர்வாகம் சார்பில் அரசு ஆதிதிராவிடர் மாணவியர் விடுதிக்கு தேவையான குடிநீர் வசதிகளை மேம் படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை மாணவி களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.