சீட்டு பணத்தை மீட்டுத் தரக்கோரி-அரசு ஊழியர்கள் மனு
உதகை,பிப்.10- உதகையில் சீட்டு பணத்தை மீட்டுத் தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் அரசு ஊழியர்கள் மனு அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகை பிங்கர் போஸ்ட் பகுதி யில் வசிப்பவர் எஸ்.சரோஜா. இவரது கணவர் சுப்பிரமணி தமிழக விருந்தினர் மாளிகையில் தோட்ட வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அரசு ஊழியர்களிடம் ஏலச் சீட்டு நடத்தி வந்தார். இதில் அரசு ஊழியர் பலர் இணைந்து பணம் செலுத்தி வந்துள்ளனர். தற்போது ரூ. 20 லட்சம் சேர்ந்துள்ள நிலையில் உரியவர்க ளிடம் பிரித்து தராமல் இழுத்தடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் சிலர் மனுநீதி நாளான திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் சீட்டு பணத்தை திரும்ப பெற்றுத்தரக் கோரி மனு அளித்தனர்.
வனத் தீயை கட்டுப்படுத்த மாணவர்களுக்கு பயிற்சி
உதகை, பி.10- உதகை அரசு பாலிடெக்னிக் மாணவர்களுக்கு, கோடை காலத்தில் ஏற்படும் வனத் தீயை கட்டுப டுத்துவது தொடர்பான பயிற்சியும், செயல்முறை விளக்கமும் குளிச்சோலை பகுதியில் உள்ள வனப் பகுதியில் திங்களன்று நடைபெற்றது. இதுகுறித்து தீயணைப்பு - மீட்புபணிகள் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது, கோடை காலம் துவங்க உள்ள நிலையில் அதிகமான வெயில் தாக்கத்தால் நீலகிரி மாவட்டத்திலுள்ள காடுகளில் காட்டுத் தீ ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் தீயணைப்பு- மீட்புப்பணிகள் துறை, சார்பில் காட்டுத் தீ ஏற்பட்டால் அதை எவ்வாறு தடுப்பது என்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். இதன்ஒருபகுதியாக, திங்களன்று உதகை அரசு பாலிடெக்னிக் மாணவர்களுக்கு வனத் தீ ஏற்பட்டால் அதை எவ்வாறு கட்டுப்படுத்துவது தொடர்பான பயிற்சியும், செயல்முறை விளக்க வகுப்பும் உதகை குளிச்சோலை பகுதியில் உள்ள வனப்பகுதியில் நடைபெற்றது. இவ்வகுப்பிற்கு நீலகிரி மாவட்ட உதவி மாவட்ட அலுவலர் தி. இம்மா னுவேல் தலைமை வகித்தார். இதில், உதகை நிலைய அலுவலர் பா.சசிக்குமார், ரெட் கிராஸ் சேர் மன் கேப்டன் கே.ஆர். மணி உள்ளிட்ட ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தொழிலாளி தற்கொலை
ஈரோடு, பிப். 10- ஈரோடு மாவட்டம், கொடுமுடி, வளந்தான் கோட்டை புதூரை சேர்ந்த வர் சங்கர்(39). இவர், பயிர்களுக்கு பூச்சிக் கொல்லி மருந்து அடிக்கும் வேலை செய்து வருகிறார். மதுபழக்கத்திற்கு அடிமை யான சங்கர், அதனை கைவிட முடியாமல் மனவே தனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலை யில் வெள்ளியன்று வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற் கொலைக்கு முயன்றுள் ளார். இதைக்கண்ட அவரது மனைவி செல்வி(32) கணவரை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். இதனையடுத்து மருத் துவர்கள் பரிசோதித்ததில் சங்கர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரி வித்தனர்.
திருப்பூர் சந்தை வியாபாரிகள் உண்ணாவிரதம்
திருப்பூர், பிப். 10 - திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத் தில் தினசரி காய்கறி சந்தையை அகற்றுவதை கண்டித்து வியாபாரிகள் முழு அடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் காமராஜர் சாலையில் அமைந்துள்ள தினசரி காய்கறி சந்தையை இடித்து வணிக வளாகம் அமைக்க உள்ளதாகவும், தினசரி மார்க் கெட் இடிக்கப்படும் எனவும் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் சிவக்கு மார் தெரிவித்திருந்தார். திருப்பூர் மாநகராட்சியின் இந்த முடிவைக் கண்டித்து திங்களன்று தின சரி சந்தையில் உள்ள அனைத்துகடை வியாபரிகளும் முழுஅடைப்பு போராட்டத் தில் ஈடுபட்டும், தங்கள் குடும்பத்தி னருடன் ஒரு நாள் அடையாள உண்ணாவி ரதமும் இருந்தனர். இப்போராட்டத்தை அடுத்து தினசரி சந்தையை இடிக்கும் பணியை மாநக ராட்சி அதிகாரிகள் தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளனர்.
மேல்நிலைத் தொட்டிக்கு குடிநீர் ஏற்ற பொதுமக்கள் கோரிக்கை
தருமபுரி, பிப். 10- காரிமங்கலம் அருகே குட்டூர் கிராமத்தில், ஓராண்டாக குடிநீர் ஏற்றப்படாமல் இருக்கும் மேல்நிலை குடிநீர் தொட்டி யால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி, குட்டூர் கிரா மத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில், கடந்த 2011ஆம் ஆண்டு ஊராட்சி நிதியில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி கட்டப்பட்டது. இதன் மூலம் ஒகேனக் கல் குடிநீர் எற்றப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஓராண்டாக, மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் காட்சி பொருளாகவே உள்ளது. இதனால், அப்பகுதி பொதுமக் கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்த மேல்நிலை தொட்டிக்கு குடிநீர் ஏற்ற பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர். எனவே, தொட்டிக்கு குடிநீர் ஏற்றி, விநியோ கம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண் டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.