tamilnadu

திருப்பூர் மற்றும் தருமபுரி முக்கிய செய்திகள்

சித்தேரி கூட்டுறவு சங்கத் தலைவர் நீக்கம்

தருமபுரி, அக்.30-  சித்தேரி மலைவாழ் மக்கள் பெரும்பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் வெ.மாதவன்  நீக்கம் செய்யப் பட்டார். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சித்தேரியில் மலைவாழ் மக்கள் பெரும்பலநோக்கு கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த வெ.மாதவன் என்பவர் உள்ளார். இந்நிலையில், கூட்டுறவு சங்கத் தலைவர் வெ.மாதவனை நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி சித்தேரி மலை வாழ் மக்கள் பெரும்பலநோக்கு கூட்டுறவு சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள் 8 பேர் நம்பிக்கை இல்லாத தீர்மா னத்தை  கொண்டு வந்தனர். இதையடுத்து, நிர்வாகக் குழு உறுப்பினர்களின் நம்பிக்கை இல்லாத தீர்மானம் அடிப்படையில் சங்கத் தலைவர் வெ.மாதவன் பதவியில் இருந்து நீக்கம் செய்யப் பட்டார். பிறகு, இந்த சங்கத்தின் துணைத் தலைவராக இருந்த ஆர்.சின்னராமன் புதிய தலைவராக நியமிக்கப் பட்டார். சித்தேரி ஊராட்சியில் உள்ள அதிமுக கட்சி நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, சித்தேரி மலைவாழ் மக்கள் பெரும்பலநோக்கு கூட்டுறவு சங்கத் தலைவர் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக கூட்டுறவு சங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

கடமான் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து- ஒருவர் பலி

பொள்ளாச்சி, அக்.30-  பொள்ளாச்சி அடுத்த ஆழியார் குரங்கு அருவி அருகே  சாலையை கடக்க முயன்ற கடமான் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரி ழந்தார். மேலும் கடமானும் உயிரிழந்தது.  கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தையல் தொழி லாளி  காளீஸ்வரன். இவரின் நண்பர் பொள்ளாச்சி வடுக பாளையத்தை சேர்ந்த முத்துக்குமார். இருவரும் செவ் வாயன்று இரு சக்கர வாகனத்தில் வால்பாறை சென்று கொண்டிருந்தனர். ஆழியார் குரங்கு அருவி அருகே வால் பாறை சாலையில் சென்றபோது கடமான் ஒன்று சாலையை திடீரென கடக்க முயன்றுள்ளது. இதனால் இவர்கள் வந்த இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து  எதிர்பாராத விதமாக கடமான் மீது மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் இருந்து இருவரும் தூக்கி வீசப் பட்டனர்.  இதில் காளீஸ்வரன் சம்பவ இடத்திலேயே பலியா னார். இவருடன் பயணித்த முத்துக்குமார் படுகாய மடைந்தார் .மேலும் இரு சக்கர வாகனம் மோதியதில் படு காயமடைந்து கடமானும் உயிரிழந்தது. இதனையடுத்து அவ்வழியாக சென்ற பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.  இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத் துறையினர் படுகாயமடைந்த முத்துகுமாரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். மேலும் உயிரிழந்த காளீஸ்வரன் உடலை பிரேத பரி சோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஆழியார் காவல்  துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். 

தருமபுரியில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

தருமபுரி, அக்.30- தருமபுரி அருகே  மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரியை அடுத்த வெண்ணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விவசாயி பழனி (53). இவரது வயலுக்கு செல்லும்  வழியில் வடிவேல் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் பழனி புதனன்று அதிகாலை அவரது வயலில்  நடந்து சென்று கொண்டிருந்தபோது வடிவேலு வீட்டிற்கு செல்லும் மின்சார வயர் தரையில் இருந்ததை கவனிக்காமல் மிதித்துள்ளார். இதனால் அவர் மீது மின் சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இவரது அலறல் சத்தத்தை கேட்டு அப்பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரி தேவராஜ் (48) என்பவர் ஓடி வந்து அவரை காப்பாற்ற முயன்றார். அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தருமபுரி நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஸ்மார்ட் சிட்டி திட்டம்: பூ மார்க்கெட் கடைகளை  காலி செய்ய அவகாசம் வழங்க கோரிக்கை

திருப்பூர், அக்.30 – திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பூ மார்க்கெட் கடைகளை இடித்து விட்டு  புதிய வணிக வளாகம் கட்டத் திட்டமிடப் பட்டுள்ளது. இதற்காக கடைகளை காலி செய்வதற்கு போதிய கால அவகாசம் வழங்க  வேண்டும் என்று பூ மார்க்கெட் வியா பாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இது  குறித்து திருப்பூர் பூ மார்க்கெட் வியாபாரிகள் திருப்பூர் மாநகராட்சி ஆணை யரிடம் புதனன்று அளித்த மனுவில் கூறியி ருப்பதாவது: திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் பகுதியில் பல  ஆண்டுகளாக வியாபாரிகள் பூக்களை விற்பனை செய்து வருகின்றனர். இந் நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்  இந்த பூமார்க்கெட் பகுதி கொண்டு வரப் பட்டு இங்குள்ள கடைகளை இடிக்க ஆணை  பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி  திட்டத்திற்காக பூ மார்க்கெட் பகுதி எடுக்க  உள்ளதாகவும் அதனால் உடனடியாக புதனன்று இரவுக்குள் கடைகளை காலி செய்ய வேண்டும் என அதிகாரிகள் கட்டளையிட்டனர். மேலும் இது குறித்து எங்களுக்கு எந்தவித அறிவிப்பும் வழங் காமல் குறிப்பிட்ட ஒரு மூன்று நபர்களிடம் மட்டும் அறிவித்து விட்டு எங்களை காலி செய்யச் சொல்லி வற்புறுத்துகின்றனர். எனவே எங்களது கடைகளை காலி செய்ய போதிய அவகாசம் வழங்குவதோடு உரிய  இடத்தில் முறைப்படி கடைகளைக் கட்டி  தரவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள் ளனர்.

குழந்தைகளுக்கான போதை மருந்து விற்பனை அதிகரிப்பு

திருப்பூர், அக். 30 – தமிழகத்திற்குப் புதிதான, குழந் ந்தைகளுக்கான போதை மருந்து விற்பனை சமீப நாட்களாக அதிக ரித்துள்ளதாகவும், இந்த போதை  ஊசி மருந்து விற்பனை திருப்பூரில் இருந்து பிற பகுதிகளுக்குச் சென்ற தாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தேசிய குழந்தைகள் உரிமை கள் பாதுகாப்பு ஆணைய உறுப் பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் கூறி னார். குழந்தைகள் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்ச னைகளை தடுத்திட பயன்படுத்தும் உத்திகள் குறித்த ஆய்வுக் கூட்டம்  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் புதனன்று நடை பெற்றது. இதில் தேசிய குழந்தை கள் உரிமைகள் பாதுகாப்பு  ஆணைய உறுப்பினர் டாக்டர்  ஆர்.ஜி.ஆனந்த் கலந்து கொண் டார். இந்த ஆய்வு கூட்டத்தில் குழந்தைகள் போதைப் பொருட் களை பயன்படுத்துவதை எவ்வாறு  தடுப்பது, அதனை முற்றிலுமாக  ஒழிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக் கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய குழந்தைகள் உரிமை கள் பாதுகாப்பு ஆணைய உறுப் பினர் ஆனந்த் கூறியதாவது: புதுக் கோட்டை மாவட்டத்தில் சிறுவர் களுக்கு போதை ஊசி விற்பனை செய்த 11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் 5  பேர் மீது குண்டர் சட்டம் போடப் பட்டுள்ளது. தமிழகத்திற்கு இந்த போதை ஊசி பழக்கம் என்பது புதியது, இந்த போதை ஊசி மருந்து திருப்பூரிலிருந்து சென்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. சுமார் ஒரு  லட்சத்திற்கும் அதிகமான மருந்துகள் புதுக்கோட்டை மாவட் டத்தில் விற்பனை செய்யப்பட் டுள்ளதும் தெரிய வந்துள்ளது.  இந்த மருந்துகள் உயிர் காப்பான் மருந்துகள் என்று அழைக் கப்பட்டாலும் பயன்படுத்தும் போது உயிர் கொல்லும் மருந்தாக அமைகிறது. இந்த போதை ஊசியை  உபயோகப்படுத்துவதன் மூலம் 24  மணி நேரமும் போதையில் இருப்பர்.  குழந்தைகள் மற்றும் சிறுவர்களை குறிவைத்து இந்த போதை ஊசி  விற்பனை செய்யப்பட்டு வந்துள் ளது. ரூபாய் 15 முதல் இந்த மருந்து கள் விற்பனையாவது கண்டறியட் பட்டுள்ளது. இந்த போதை ஊசியை  உபயோகிப்பதன் மூலம் சிறுமூளை  அதிக அளவில் பாதிப்புக்குள் ளாகும் என மருத்துவர்கள் தெரி வித்துள்ளனர்.  இந்த போதை மருந்து விற் பனையை தடுப்பது தொடர் பாக பல்வேறு நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இந்த போதை மருந்துகள் தமிழ கத்திற்குள் எவ்வாறு வந்தது குறிப் பாக இந்தியாவிற்குள் எந்த  வழியாக வந்தது என்பது குறித்து  போதைப் பொருள் கடத்தல்  தடுப்புப் பிரிவு அதிகாரிகள்  விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். ஒரு மாத காலத்திற்குள் தமிழகத்தில் போதை ஊசி விற்ற கும்பல் கண்டுபிடிக்கப்பட்டு முற்றி லுமாக ஒழிக்கப்படும் என்றார்.

திருப்பூர் மாவட்டத்தில் மழையளவு

திருப்பூர், அக். 30 – திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செவ் வாய்கிழமை மாலை முதல் பரவலாக மழை பெய்து வரு கிறது.  இதன்படி மாவட் டத்தில் பதிவான மழை விபரம் வருமாறு: திருப்பூர் வடக்கு – 11 மி.மீட்டர், அவி நாசி 49 மி.மீ., பல்லடம் 12, ஊத்துக்குளி 8, காங்கேயம் 20.3 மி.மீ., தாராபுரம் 11, மூலனூர் 20, குண்டடம் 40 மி.மீ., திருமூர்த்தி அணை 48 மி.மீ., அமராவதி அணை 36 மி.மீ., உடுமலை  11.40 மி.மீ., மடத்துக்குளம் 13 மி.மீ., மாவட்ட ஆட்சி யரகம் 14 மி.மீ., வெள்ள கோவில் 7.10 மி.மீ., திரு மூர்த்தி டிராவலர்ஸ் பங்களா 66.80 மி.மீ அளவு  மழை பெய்துள்ளது. மாவட் டத்தில் மொத்த மழையளவு 376 மி.மீட்டர். சராசரி 23.56 மில்லி மீட்டர் ஆகும்.