tamilnadu

நாமக்கல், தருமபுரி முக்கிய செய்திகள்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.25 கோடி மோசடி செய்த ஆளும் கட்சி பிரமுகர் 

நாமக்கல், செப்.15- நாமக்கல்லில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.25 கோடி மோசடி செய்த ஆளுங்கட்சியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வரு கின்றனர்.  நாமக்கல் கணேசபுரம் தெருவை  சேர்ந்த பொன்னுசாமி. இவர் மனைவி  கலைச்செல்வி (49). இவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து  ஏலச்சீட்டு நடத்தி வந்தார்.  இவரிடம் நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் மற்றும்  பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஏலச் சீட்டில் சேர்ந்து பணம் செலுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டாக ஏலச் சீட்டில் பணம் எடுத்தவர்களுக்கு கலைச்செல்வி முறையாக பணம் கொடுக்கவில்லை.  இந்நிலையில் கடந்த மாதம் கலைச் செல்வி திடீரென தலைமறைவானார்.  அவருடன் குடும்ப உறுப்பினர்களும் தலை மறைவானார்கள்.  இந்த மோசடி குறித்து கடந்த 27ஆம் தேதியன்று நாமக்கல் மாவட்ட குற்றவியல் பிரிவில் நவணியை சேர்ந்த கோபிநாத் என்ற இன்ஜினியர் புகார் அளித்தார். அப் புகாரில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் கலைச்செல்வியிடம் ரூ.85 லட்சம் வரை சீட்டு பணம் கட்டியதாகவும், ஆனால் பணத்தை திருப்பித் தராமல் அவர் ஏமாற்றி  விட்டதாகவும் தெரிவித்திருந்தார். இதனடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் சுபாஷ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.  இதில் கலைச் செல்வி மற்றும் அவரது குடும்ப உறுப்பி னர்கள் 170 பேரிடம் ரூ.25 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இதை யடுத்து கலைச்செல்வி (49), பொன்னுசாமி (56), சிந்துஜா (26), நிர்மலா (48), செல்லம் மாள் (67), மலர்க்கொடி (45), பழனி யாண்டி (72) ஆகிய 7 பேர் மீது மோசடி ஈடு பட்டதாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர்.  இந்நிலையில் கடந்த 4ஆம் தேதியன்று சேலம் நீதிமன்றத்தில் கலைச்செல்வி சரண டைந்தார். இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் நாமக்கல் முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கலைச்செல்வியை  காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் ஜெயந்தி இரண்டு நாள் கலைச்செல்வியை நீதிமன்ற காவலில் எடுத்து  விசாரிக்க அனுமதி அளித்தனர்.  இந்நிலையில், மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு கலைச்செல்வியை காவல்துறையினர் அழைத்து வந்தனர். இது குறித்து தகவலறிந்த பணம் கட்டி ஏமாந்த வர்கள் எஸ்பி அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். மாவட்ட குற்றப்பிரிவு அலுவ லகம் செல்ல முயன்ற காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தனர்.  முன்னதாக, கலைச்செல்விடம் ஏல சீட்டில் சேர்ந்து பணம் கட்டி ஏமாந்த நூறுக்கும் மேற்பட்டவர்கள் கடந்த 26ஆம் தேதியன்று எஸ்பி அலுவலகத்துக்கு வந்து  மனு அளித்தனர். அப்போது அங்கிருந்த காவலர்கள் வழக்கு போட்டால் பணம் கிடைக்காது, பணம் வேண்டுமென்றால் திரும்பிப் போய் விடுங்கள் என மிரட்டி அனுப்பி விட்டனர். இந்நிலையில் காவல் துறையினர் பணத்தை திருப்பி வாங்கி கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் கலைச்செல்வி மற்றும் அவரது குடும்ப  உறுப்பினர்களை தேடுவதை பாதிக்கப் பட்டவர்கள் நிறுத்திவிட்டனர்.  கலைச்செல்வி ஆளும் கட்சி முன்னாள் கவுன்சிலராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

கோபிநாதம்பட்டி கூட்டுச்சாலை பகுதிக்கு  ஒகேனக்கல் குடிநீர் வழங்க வலியுறுத்தல்

தருமபுரி, செப்.15- அரூரை அடுத்த கோபிநாதம்பட்டி கூட்டுச்சாலை பகுதிக்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.  தருமபுரி மாவட்டம் அரூர் ஊராட்சி ஒன்றியம், பறைப்பட்டி புதூர் கிராம ஊராட்சிக்கு உள்பட்டது கோபிநாதம்பட்டி கூட்டுச்சாலை கிராமம். இக்கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளன. கோபிநாதம்பட்டி கூட்டுச்சாலை வழி யாக எச்.கோபிநாதம்பட்டி, கொக்கராப் பட்டி, பறையப்பட்டி புதூர் ஆகிய பகுதி களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் குழாய் இணைப்புகள் செல் கிறது. ஆனால், கோபிநாதம்பட்டி கூட்டுச் சாலையில் உள்ள குடியிருப்புகளுக்கு மட்டும் ஒகேனக்கல் குடிநீர் கிடைப்ப தில்லை. இதனால் மக்கள் நாள்தோறும் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி  வருகின்றனர். அதேபோல், கோபிநாதம் பட்டி கூட்டுச்சாலையில் 3 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளன. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு ஒகேனக்கல் கூட்டு குடி நீர் திட்டத்தில் குழாய் இணைப்புகள் ஏற்படுத்தப்படவில்லை.  எனவே, கோபி நாதம்பட்டி கூட்டுச்சாலையில் உள்ள அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி களுக்கும் குழாய் இணைப்புகளை ஏற் படுத்தி, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட் டத்தில் இருந்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என மக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.