tamilnadu

img

குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகம் முற்றுகை

நாமக்கல், ஜூலை 6- குடிநீர் கேட்டு திருச்செங்கோடு நக ராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களு டன் பொதுமக்கள் முற்றுகையிட்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட 30 ஆவது வார்டு கொல்லப்பட்டி பகுதியில் சுமார் 150 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின் றன. இப்பகுதியில் வசித்து வரும் மக்க ளுக்கு கடந்த ஒரு மாத காலமாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை. இந்நிலையில் ஆசேவமடைந்த அப் பகுதி மக்கள் திருச்செங்கோடு நகராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனையடுத்து குடிநீர் தட்டுப்பாட்டை உடனடியாக சரி செய்திட வேண்டும் என வலியுறுத்தி திருச்செங்கோடு நகராட்சி பொறியாளர் சுகுமாரிடம் மனு அளித்தனர். அதனை பெற்றுக் கொண்ட அவர் ஓரிரு நாட்களில் குடி நீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனையடுத்து அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.