tamilnadu

கொரோனா பரிசோதனை என அழைத்து சென்ற மகனை காணவில்லை - தந்தை புகார்

கோவை, ஜூன் 22- கோவையில், கொரோனா தொற்று பரிசோதனை என  அழைத்து சென்ற மகனை காணவில்லை என தந்தை புகார் தெரிவித்துள்ளார்.

கோவை சேரன் மாநகர் பாலாஜி நகரை சேர்ந்தவர் கணே சன். இவரது மகன் பிரேம்கிரண்(29). இவர் கோவை பப்ளிக் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வரு கிறார்.

இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி மாலை இருவர் பிரேம்கிரணை தொடர்பு கொண்டு சிவாந்தபுரம் கார்பரே சன் வங்கி அருகே வர சொன்னதை தொடர்ந்து தந்தையும் மகனும் சென்று உள்ளனர். அங்கு 38 வய்துடைய ஒருவரும் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் தாங்கள் சுகாதார துறை அலுவலகத்தில் இருந்து வருவதாக அறிமுகப்படுத்தி கொண்டனர்.

மேலும் கிரண்குமாருக்கு கொரோனா தொற்று பரிசோதனை குறித்து விசாரணை செய்ய வேண்டும் என கூறி பிரேம்கிரணை அழைத்து சென்றுள்ள னர். இதன் பின்னர் அவர் எங்கு அனுமதிக்கப்படுவார் என தெரிவிப்பதாக அவரது தந்தையிடம் கூறியுள்ளனர்.  ஆனால், வெகு நேரமாகியும் தகவல் வராததால் தனது மகனை தொடர்பு கொள்ள முயன்றபோது அலைபேசி அணைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கணேசன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள சரவணம்பட்டி போலீசார் காணாமல் போன பிரேம்கி ரணை தேடி வந்தனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட நபர் இராமநாதபுரம் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஆபாச படம் அனுப்பியதாகவும், இதன்பேரில் விசா ரணை நடத்த அம்மாவட்ட காவல்துறையினர் முறைப்படி மாநகர காவல்துறைக்கு தகவல் அளித்து கொரோனா மருத்துவ பரிசோதனை நடத்திய பிறகு பிடித்து சென்றதாக வும் கூறப்படுகிறது.