கோவை, ஆக. 16– பெண் ஊடகவியலாளரை முக நூலில் ஆபாசமாகவும், அவதூறாக வும் பதிவிட்ட நபர் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவையில் அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கத்தினர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ராதிகா, பொரு ளாளர் ஜோதிமணி, மாநிலக்குழு உறுப்பினர்கள் ராஜலட்சுமி, சுதா உள் ளிட்ட நிர்வாகிகள் காவல் கண்காணிப் பாளரிடம் அளித்த புகாரில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது, தமிழகத்தில் பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் பொது வெளியில் மக்கள் சேவையாற்றும் பெண்களைப் பற்றி சமீபகாலமாக சமூக வலைதளங்களில் ஆபாசமாக வும், அவதூறாகவும் பதிவு செய்து பகி ரப்படுகிறது. சம்பந்தப்பட்ட பெண் களின் புகைப்படத்தை வெளியிட்டு அறுவறுக்கத்தக்க வார்த்தைகளில் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக இந்துத்துவ மற்றும் சாதிய அமைப் பைச் சேர்ந்தவர்கள் இத்தகைய நடவ டிக்கையில் தொடர்ந்து ஈடுபடுகின்ற னர். மேற்படி நிகழ்வுகளால் பொது நோக்கத்திற்காக செயல்படும் பெண் கள் உயிருக்கும், மானத்திற்கும் பயந்து வாழக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், சசிக்குமார் என்ப வர் அவரது முகநூலில் ஊடகவியலா ளர் கவின்மலர் என்பவரது புகைப்ப டத்தை வெளியிட்டு மிகவும் ஆபாச மான வார்த்தைகளைப் பதிவு செய்து மிகவும் அறுவறுக்கத்தக்க வகையில் நடந்து கொண்டுள்ளார். சமீப கால மாக நடைபெறும் இதுபோன்ற சம்ப வங்களில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததன் விளை வாகவே இத்தகைய செயல்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆகவே மேற்படி கவின்மலர் புகைப்படத்தை அனுமதியில்லாமல் சமூக வலைத்த ளத்தில் வெளியிட்டு அறுவறுக்கத் தக்க வகையில் பதிவு செய்த சசிக்குமார் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகர் மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.