tamilnadu

img

மார்ட்டின் குழும காசாளர் மர்ம மரணம் மறு பிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு

கோவை, மே 25-தொழில் அதிபர் மார்ட்டின் நிறுவன காசாளர் பழனிசாமியின் உடலைமே 28 ஆம் தேதி மறு பிரேத பரிசோதனை செய்ய கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தொழில் அதிபர் மார்ட்டின் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த காசாளர் பழனிசாமி கடந்த 3-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் பழனிசாமியின் மகன்ரோகின் குமார் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 8-ல் நீதிபதி ராமதாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காசாளர் பழனிசாமியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், அந்தப் பரிசோதனையின்போது மனுதாரர் சார்பில் உள்ள மருத்துவர்கள் இருக்க வேண்டும் எனவும்மனுதாரர் தரப்பில் கோரியிருந்தனர்.இந்த நிலையில், மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்ட காயங்கள் மற்றும் நீதிமன்றத்தில் பெறப்பட்டசாட்சிகளின் வாக்குமூலங்கள் உள்ளிட்ட இதர ஆவணங்களை நீதிபதி ஆராய்ந்தார். பின்னர் இந்த மே 5-ம்தேதி செய்யப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் இறுதியறிக்கை ஆகியவைகள் முழுமையாகவும், திருப்திகரமான வகையிலும் இல்லை என்று கூறி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், மேற்கண்ட காரணங்களால் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள பழனிசாமியின் உடலை பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர் குழு அல்லாமல், இரண்டிற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கொண்ட குழுவினரை வைத்து மீண்டும் பிரேதபரிசோதனை செய்ய கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு உத்தரவிடப்பட்டது. இந்த பிரேத பரிசோதனையில் மனுதாரர் தரப்பில் டாக்டர் சம்பத்குமார் இந்தகுழுவில் இருப்பார் எனவும், அதேபோல, பிரேத பரிசோதனை முழுவதும்வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனக்கூறிய நீதிபதி, இந்த பிரேத பரிசோதனையை மே 28ம் தேதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.