பென்னாகரம், ஜூலை 29- பென்னாகரம் அருகே காதலித்து திருமணம் செய்துகொண்டதால் ஆதிக் கச்சாதியினர் ஒரு குடும் பத்தையே கட்டி வைத்து அடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட் டுள்ளது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், தாராபுரம் அருகே உள்ள விக்கம் பட்டி என்ற கிராமத்தில் காளிதாசன் அவரது மகன் அஜித்குமார் (23).தாளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரது மகள் பிரியா (22). இருவரும் கல்லூரியில் படிக்கும் போது காத லித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் அவர்களது காதலுக்கு பிரியாவின் பெற்றோர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்நிலை யில் கடந்த மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்து பெண் வீட்டாருக்கு தெரிய வந்த நிலையில், இவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகார் மீது காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தபோது பெண் வீட்டார் ஆதிக்க சமூ கத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் அஜித் குமாரின் பெற்றோர்கள் மற்றும் அவரது உறவினர்கள் ஊரை காலி செய்து கொண்டு பெங்களூர் சென்று விட்டனர். இதையறிந்து கொண்ட ஆதிக்க சாதி யினர் அஜித்குமாரின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோரை பெங்களூரிலிருந்து சில தினங்களுக்கு முன்பு அழைத்து வந்துள்ள னர். அவர்களை தாளப்பள்ளம் கிராமத்தில் வைத்து பெண்ணை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மிரட்டியுள்ளனர். அவர்கள் தங்களுக்கு எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாது என்று கூறிய நிலையில், அவர் களை மரத்தில் கட்டி வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், பெண்களை நிர்வாணப்படுத்தி அடித்து கொடுமைப் படுத்தி உள்ளனர். மூன்று தினங்களாக அவர்களை வைத்து அடித்து இன்னும் ஒரு வார காலத்திற்குள் தங்களிடம் எங்களது பெண்ணை ஒப்படைக்க வேண்டும். இல் லையென்றால் தங்களது குடும்பத்தை அழித்து விடுவோம் என மிரட்டி அவர் களை விடுவித்துள்ளனர். ஆதிக்க சாதியினர் தாக்கியதில் கடுமை யாக காயமடைந்த காளிதாசன் மற்றும் அவ ரது உறவினர்கள் ஆகியோர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பிக்கம்பட்டி மற்றும் தாளப் பள்ளம் கிராமத்தில் வசித்து வந்த அஜித் குமாரின் உறவினர்கள் அனைவரும் ஊரை காலி செய்துகொண்டு வெளியூர்களுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர். கடந்த 2012 ஆம் ஆண்டு தருமபுரி அடுத்த நாய்க்கன்கொட்டாய் நத்தம் கிராமத்தில் இளவரசன், திவ்யா திருமணத் தால் மூன்று கிராமத்தையை சாதிவெறி கும்பல் தீயிட்டு கொளுத்தினர். இச்சமப வத்திற்கு காவல்துறையின் மெத்தன போக்கே காரணமாக இருந்தது. இச்சூழ்நிலையில் மீண்டும் காதல் திரு மணத்தால் தருமபுரி மாவட்டத்தில் சாதிய வன்கொடுமை, தாக்குதல் சம்பவம் தலை தூக்கியுள்ளது. ஆதிக்க சாதியினரின் அச்சுறுத்தலில் இருந்து காதல் திருமணம் செய்த தம்பதியின ருக்கு பாதுகாப்பும்,பெண்களை நிர்வானப் படுத்தி மரத்தில் கட்டிவைத்த அடித்த சாதி வெறியர்களை கைதுசெய்யவேண்டும், நாவிதர் சமூக மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், காவல்துறையினர் முழுமையாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஆதிக்க சாதியினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.