கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் ஆய்குப்பம் ஒன்றிய கவுன்சிலர் வார்டு எண் 19 பதவிக்கு போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம். அஞ்சலைக்கு இடங்கொண்டான்பட்டு கிராமத்தில் வாக்கு கேட்டு கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன், வட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.எஸ்.ராஜ், ஆர்.சிவகாமி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எம்.மணி. ஏ.நமச்சிவாயம், வி..கிருஷ்ணமூர்த்தி, கே..சீனுவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பரங்கிப்பேட்டை ஒன்றியம் பள்ளிப்படை கிராம ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பர்வீன் பானுவுக்கு மாநிலக்குழு உறுப்பினர் மூசா, நகர் குழு உறுப்பினர்கள் அஸ்ரப் அலி, ஜின்னா ஜோசப் உள்ளிட்ட பலர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.
பரங்கிப்பேடை ஒன்றிய 17ஆவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் விஜயலட்சுமி கலைமணிக்கு வடக்குப் பிச்சாவரம் பகுதியில் ஒன்றியச் செயலாளர் ரமேஷ்பாபு, நகரச் செயலாளர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.
குமராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் தனலஷ்மி மணிவண்ணனுக்கு மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், மாநிலக் குழு உறுப்பினர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேன்மொழி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பிரகாஷ், வாஞ்சிநாதன், குமராட்சி ஒன்றியச் செயலாளர் மூர்த்தி உள்ளிட்டோர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.
திருமுட்டம் ஊராட்சி ஒன்றியம் வார்டு 8 பேரூர் கூடலையாத்தூர் காவலகுடியர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு சிபிஎம் சார்பில் போட்டியிடும் ராமுவுக்கு மாவட்டக் குழு உறுப்பினர் பிரகாஷ், தினேஷ் பாபு, விவசாய சங்கத் தலைவர்கள் ஆதிமூலம், முத்தமிழ்ச்செல்வன், கோவிந்தசாமி, வாலிபர் சங்க நிர்வாகிகள் நாகராஜன், சூர்யா ஆகியோர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.
காட்டுமன்னார்குடி ஒன்றியம் ராயநல்லூர், கொள்ளுமேடு, உத்தமசோழன் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு சிபிஎம் சார்பில் போட்டியிடும் ராணி பூச்சந்திரனுக்கு மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேன்மொழி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ், வாஞ்சிநாதன் ஆகியோர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.
பரங்கிப்பேட்டை ஒன்றியம் சீ. கொத்தங்குடி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் கோ.பாலகிருஷ்ணனுக்கு நகரச் செயலாளர் ராஜா, நகர் குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, மல்லிகா, அமுதா, செல்வம் ஆகியோர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் விக்கிரமன் கிராமப்புற விவசாயிகளிடம் வாக்கு சேகரித்தார். இதில் நிர்வாகிகள் பி.செல்வன், சிவாஜி, கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கலசபாக்கம் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் வி.சுப்பிரமணிக்கு ஆணைவாடி கிராமத்தில் நிர்வாகிகள் எம்.பிரகலநாதன், கே.கே.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.
செங்கம் ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் ஏ.பரிமளாவுக்கு மாநிலக் குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், நிர்வாகிகள் எம்.வீரபத்திரன், ஏ.லட்சுமணன், பி. கணபதி உள்ளிட்ட பலர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.