tamilnadu

img

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு - டிச.17ல் கடைகள் அடைப்பு வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா அறிவிப்பு

கோவை, நவ. 23-  சில்லரை வணிகத்தில் அந்நிய முத லீட்டை கண்டித்து டிசம்பர் 17 ஆம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட் டத்தை நடத்த உள்ளதாக வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா சனியன்று கோவையில் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், சில்லறை வணிகத்தில் அன் னிய முதலீடு பெரும் பாதிப்பை ஏற்படுத் தியுள்ளது. இதனைக் கண்டித்து வரும் டிசம்பர் 17 ஆம் தேதி தமிழகம் முழுவ தும் கடைகள் அடைக்கப்பட்டு ஆர்ப்பாட் டம் நடத்த உள்ளோம். மேலும், ஜிஎஸ்டி வரிவிதிப்பில் வணிகர் சங்கத்தின் கோரிக் கையை மத்திய அரசு இன்னும் நிவர்த்தி  செய்யவில்லை. எனவே உள்நாட்டு வணி கர்களின் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றார். முன்னதாக இந்த போட்டியின்போது வணிகர் சங்க கோவை மாவட்ட நிர்வாகி கள் உடனிருந்தனர்.