tamilnadu

img

அரசு பள்ளிகளில் நீதிபோதனை, தற்காப்புக்கலை வகுப்புகள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

கோவை, செப்.28 – அரசு பள்ளிகளில் அடுத்த வாரத்தில் இருந்து வாரத்தில் ஒரு நாள் நீதிபோதனை வகுப்பும், அடுத்த மாதத்தில் இருந்து தற் காப்புக்கலை வகுப்பும் நடத்தப் படும் என்று கோவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார். கோவை நீலம்பூர் அருகே உள்ள ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரி சார்பில் கோவையில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரி யர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி அக்கல்லூரி வளாகத்தில் சனியன்று நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் கந்த சாமி மற்றும் ஆறுகுட்டி ஆகி யோர் கலந்துகொண்டு ஆசிரி யர்களுக்கு விருதுகளை வழங் கினர். இதைத்தொடர்ந்து நிகழ்ச்சி யில் அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் பேசியதாவது, இன்றைய தலைமுறையினரி டையே பாச உணர்வு குறைந் துள்ளது. அதனை மேம்படுத்தவும், மற்றவர்களுடன் பழகும் விதங் களை கற்றுக்கொடுக்கும் வித மாகவும், அடுத்த வாரத்தில் இருந்து வாரத்தில் ஒரு நாள் அரசு பள்ளிகளில் நீதிபோதனை வகுப்பு நடத்தப்படும். ஒழுக்கத்துடன் சேர்ந்த கல்வி என்பதை அடிப் படையாக இந்த வகுப்பு துவங்கு கிறது. அதேநேரத்தில் தன்னி டத்தில் தவறாக நடந்து கொள் பவர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள அடுத்த மாதத்தில் இருந்து தற்காப்புக்கலை வகுப்பு நடத்தப்படும் என்றார். மேலும், தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி களில் ஒரு கோடியே 46 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்ற னர். இந்த மாணவர்கள் ஆண் டிற்கு குறைந்தது 2 மரங்களாவது நடவு செய்ய வேண்டும் என்றும், அதற்கு மதிப்பெண் வழங்கலாமா என்றும் தமிழக முதல்வருடன் ஆலோசனை செய்து வருகிறோம்.  மேலும், பள்ளிக் கல்வித்துறை மூலம் இந்தியாவிலேயே முதன் முறையாக தொடர்ந்து மூன்றா வது ஆண்டாக தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய புதிய  பாடத்திட்டத்தில் நீட் தேர்வுக் கான 90 சதவிகித விடைத்தாள்கள் அதில் இருக்கிறது.  அடுத்தாண்டு குழந்தைக ளுக்கு காலணிக்கு பதிலாக ஷூ மற்றும் சாக்ஸ் வழங்கப்படும். ஐ.சி.டி என்ற திட்டத்தின் கீழ், 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் 10 கணினிகளும், பிளஸ்1, பிளஸ்2 வகுப்புகளுக்கு 20 கணினிகளும் வைக்கப்பட உள்ளது. 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் 7,500 வகுப்பறைகள் ஸ்மார்ட் வகுப் பறைகளாக மாற்றப்பட உள்ளது. 75 ஆயிரம் ஸ்மார் போர்டுகள் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் வைக்கப்படும். வகுப்பில் பாடத்தை கவனிக்க முடியாத மாணவர்கள் ஓய்வு நேரங்களில் பாடத்தை செல்போனில் படிப் பதற்கான திட்டப்பணிகள் அடுத்த மாதம் துவங்கும் என்றார்.