அவிநாசி, பிப். 14- அவிநாசி அருகே பள்ளிவாசல் முன்பு குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி வெள்ளியன்று இஸ்லாமி யர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதிலும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளி யன்று அவிநாசியில் பள்ளிவாசல் அருகில் இஸ்லாமியர்கள் தொழுகை முடிந்து ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப் பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு குடியுரிமை சட்ட திருத்தத் தைத் திரும்பப்பெற வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டனர்.