tamilnadu

img

உதிரச்செங்கொடியை உயர்த்திப்பிடிப்போம் இந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு விழா எழுச்சியோடு துவக்கம்

கோவை, அக்.17- இந்திய விடுதலை போராட்டத் திலும், உழைப்பாளி மக்களின் விடி யலுக்கான போராட்டத்திலும் களத் தில் நின்று உயிர்த்தியாகம் செய் திட்ட உதிரச்செங்கொடியை உயர்த் திப்பிடிப்போம் என்ற முழக்கத்தோடு இந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற் றாண்டு துவக்க விழா எழுச்சியோடு  கொண்டாடப்பட்டது.  இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக் கத்தின் முதல் கிளை 1920 அக்டோபர் 17 ஆம் தேதியன்று உருவானது. இதன் நூற்றாண்டு துவக்க விழா வியாழ னன்று நாடு முழுவதும் பெரும் எழுச் சியுடன் துவங்கியது. இதன்ஒரு பகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற கொடி யேற்று விழாவிற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி தலைமை தாங்கினார். கிழக்கு நகர செயலாளர் என்.ஜாகீர் வரவேற்புரை யாற்றினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான கே.சி.கருணா கரன், யு.கே.வெள்ளிங்கிரி மற்றும்  மூத்த தோழர் என்.வி.தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் கட்சியின் மூத்த தோழர் சி.என்.கிருஷ்ணசாமி எழுச்சி மிகு முழக்கங்களுக்கிடையே செங் கொடியை ஏற்றிவைத்தார். இதைத்தொடர்ந்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநா பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் நூற்றாண்டு கண்ட செங்கொடி இயக்கத்தின் தியாகம், கடந்து வந்த பாதை, எதிர்கொண்ட சாவல்கள் குறித்து உரையாற்றினர். இந்நிகழ்ச்சி யில் கட்சியின் மாவட்ட செயற்குழு மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர் கள் மற்றும் கட்சியின் முன்னணி ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமா னோர் பங்கேற்றனர். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. அஐய்குமார் நன்றி கூறினார். இதேபோல், கோவை மாவட்டம் முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி யின் ஐநூற்றுக்கும் மேற்பட்ட கிளை களில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தின் நூற்றாண்டு துவக்கத்தை செங் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண் டாடினர்.
நீலகிரி
உதகையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில் கட்சியின் கொடி யினை மாவட்ட குழு உறுப்பினர் வி.வி.கிரி ஏற்றிவைத்தார். இதேபோல் கேத்தி கிளையில் கட்சியின் கொடி யினை மாவட்ட செயலாளர் வி.ஏ. பாஸ்கரன் ஏற்றிவைத்தார். இதே போல் மாவட்டம் முழுவதும் நூற் றுக்கும் மேற்பட்ட இடங்களில் செங் கொடியினை ஏற்றி நூற்றாண்டு விழா வினை எழுச்சியுடன் கொண்டாடினர்.