tamilnadu

img

இந்தியே இந்தியாவா?

இந்தியா !- நம் தேசம் இந்தியா!-இங்கு
எல்லோரும் பேசும் மொழி இந்தியா?
          தமிழும் பிறமொழியும் தாதியா?- 
          இந்தி ராணியா?
          சமஉரி மைச்சங்கு முழங்குது கேளையா!
                                                                                                                                   (இந்தியா)
பூக்கள் பலப்பல பூங்கா ஒன்றே!
ஒரு பூ பூங்காவா சொல்?
மொழிகள் பலப்பல தேசம் ஒன்றே
ஒரு மொழிக் காதேசம் சொல்?
         “இந்து நான் என ஏற்காதவர்
          இந்தியர் இல்லை” என்றார்
         இந்தி மொழி தெரியாதவரும்
         இந்தியர் இல்லை என்பார் !
இந்திக்கு மட்டும் ஏன் அரியாசனம்?
தமிழுக்கும் தருக சரியாசனம்
தராத வர்க்கு நாம் சிம்ம சொப்பனம் 
சிம்ம சொப்பனம்!
                                                                                                                         (இந்தியா)
ஆட்சி மன்றம் கல்வி நிர்வாகம் யாவுமே
இந்தி வெறியரின் குறி.
கொல்லைப்புறம் அல்ல வாசல் வழியாகவே
குத்தாட்டம் போட்டு வரும் வெறி.
         திணிக்காதே அட திணிக்காதே!
         திணிப்பது இனிக்காதே.
         ஒருமொழி ஒரு மதம் எனும் பார்வை
         ஊர் போய்ச் சேராதே!
உயிருக்கு மட்டும் தமிழ் நேர் அல்ல!
வயிறுக்கு மே தமிழ் நேர் என்க!
வாய்ப்புகள் தமிழ்வழி வரச் செய்க!
வரச் செய்க.
                                                                                                                     (இந்தியா)
உணர்ச்சிப் பிரச்சினை மட்டுமல்ல அல்ல
உரிமைப் பிரச்சினை மொழி.
தேசிய இனங்களின் சிறையாய் நாட்டினை
செய்வது ஆர்எஸ்எஸ் வழி .
         தமிழை “செந்” தமிழாய் சிவக்க வைக்கும்
         மொழிப்போர்த்தியாகி ரத்தம்.
         மறுபடி நாங்கள் தொடங்குகிறோம்
         தாய்த் தமிழ் உரிமையுத்தம்.
எத்தனை மொழிகள் பூத்த கொல்லை!
இந்தி மட்டுமே தேசமில்லை!
ஒழிக சங்கிகள் செய்யும் தொல்லை 
செய்யும்தொல்லை.
                                                                                                              (இந்தியா)