கோவையில் உள்ள கொடிசியாவில் பிரம்மாண்டமான முறையில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.இதில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு கண்டுகளித்தனர்.
கோவை கொடிசியா வளாகத்தில்,மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்தும் விதமாக கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டது.இதில் கோவை மாணவர்கள் உட்பட அருகாமையில் உள்ள திருப்பூர்,ஈரோடு மற்றும் நாமக்கல் என பல மாவட்டத்திலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இக்கண்காட்சியில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ரோபோக்கள்,விண்வெளியில் இயங்க கூடிய ஸ்பேஸ் வெஹிக்கல்,எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளை காப்பாற்றும் நவீன இன்கு பேட்டர், உள்ளிட்ட பல அறிய கண்டுபிடிப்புகள் வைக்கப்பட்டிருந்தன.இதனை பள்ளி மாணவர்களும்,கல்லூரி மாணவர்களும் ஆச்சரியமுடன் கண்டுகளித்தனர்.