கோவை,பிப். 26 - கோவையில் வருகின்ற பிப். 29ஆம் தேதியன்று உண்ணாநிலை போராட்டம் நடத்த உள்ளதாக பேரூரா தீனம் மருதாசல அடிகளார் தெரிவித் துள்ளார். கோவை மாவட்டம், ஆடிஸ் வீதி யில் உள்ள கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் பேரூர் ஆதீனம் சாந்த லிங்க மருதாசல அடிகளார் செய்தியா ளர்களுக்கு பேட்டியளித்தார். அப் போது பேசிய அவர், தொடக்க நிலை யில் இருந்து கல்லூரி கல்வி வரையி லும் தமிழ் வழிக்கல்வியை அரசு நடை முறைப்படுத்த வேண்டும். அனைத்து கோவில்களிலும் குட முழுக்கு, வழி பாடுகளில் தமிழையே பயன்படுத்த வேண்டும். தமிழே ஆட்சி மொழி என்பதை தமிழக அரசு அனைத்து துறைகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் தமிழர்க ளுக்கு 80 சதவிகித வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ் மொழிக் காப்புக் கூட்டியக்கம் சார்பில் வரு கின்ற பிப்.29 ஆம் தேதியன்று கோவை சிவானந்தா காலனி பகுதியில் ஒரு நாள் அடையாள உண்ணா நிலைப் போராட்டம் நடைபெற உள்ளது. மேலும், இப்போராட்டத்தில் 60க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்பி னரும், தமிழ் ஆர்வலர்களும் பங்கேற்க உள்ளனர் என தெரிவித்தார். முன்னதாக, தமிழ்மொழிக்காப்பு கூட்டியக்கத்தின் தலைவர் அப்பாவு பேசுகையில், தற்போதைய சூழலில் குழந்தைகள் நாவில் கூட தமிழ் இல்லை. காலப்போக்கில் தமிழ் மொழி முழுவதுமாக அழிக்கப்பட்டுவிடும் என்றார். இத்தகைய நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்கா கவே கூட்டியக்கம் துவங்கப்பட்டு உள்ளதாகவும், மக்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்த தமிழகம் முழுவ தும் விழிப்புணர்வு செய்யும் முயற்சி கள் மேற்கொள்ளப்படும் என்றார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேராசிரியர் சிற்பி, புலவர்கள் இர வீந்திரன், கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.