சாலைப் பணியாளர்கள் நூதனப் போராட்டம்
கோவை, ஜன. 25 – சட்டத்திற்கு புறம்பாக சாலைப் பணியாளர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்தும், ஆணவப் போக் குடன் செயல்படும் கோவை மாவட்ட கண்காணிப்பு பொறியாள ரின் நடவடிக்கையைக் கண்டித்து சனியன்று கோவை நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன்பு சாலைப் பணியாளர்கள் பாடைக்கட்டி, ஒப் பாரி வைத்து நூதன போராட் டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட் டது. கோவை - திருச்சி சாலையில் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை யின் கீழ் கோவை மாவட்ட நெடுஞ் சாலைத்துறை செயல்படுகிறது. இங்குள்ள கோட்டப்பொறியாளர் சுரேஷ் தொடர்ந்து ஊழியர் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகி றார். சட்டத்திற்கு புறம்பாக ஊழி யர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்வது, சட்டப்படியான பலன் களை தர மறுப்பது, திட்டமிட்டே சாலைப்பணியாளர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுத்து வது உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத்தொடர்ந்து சாலைப் பணியாளர் சங்கத்தினர் வெள்ளி யன்று தொடர் முழக்க போராட்டத் தில் ஈடுபட்டனர். தொழிற்சங்க பிர திநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு எட்டப்பட வேண் டும் என ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் கோட்டப் பொறியாளரோ அலுவலகத்தை பூட்டிவிட்டு ஆணவப்போக்குடன் வெளியேறிச் சென்றுவிட்டார். இச்செயலானது ஊழியர்கள் மத்தி யில் ஆவேசத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து, தொடர் முழக்க போராட்டம் காத்திருப்பு பேராட்ட மாக அறிவித்து வெள்ளியன்று இரவு முழுவதும் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
இதன்தொடர்ச்சியாக, சனி யன்று நெடுஞ்சாலை நிர்வாகத்தை பாடையில் ஏற்றி, சுற்றி அமர்ந்து ஊழியர்கள் ஒப்பாரி போராட்டத் தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆ.அம்ச ராஜ் கூறுகையில், கோவை கோட்ட கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ் சட்டத்திற்குப் புறம்பாக ஊழியர் களின் ஊதியத்தை பிடித்தம் செய் கிறார். மேலும், நியாயமாக ஊழி யர்களுக்கு வந்து சேரவேண்டிய பலன்களை தரமறுத்து பெரும் அலைகழிப்புக்கு உள்ளாக்கி வரு கின்றார். உடனடியாக தமிழக முதல்வர் தலையீடு செய்து கண் காணிப்பாளர் சுரேஷ் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். தொழி லாளர்களுக்கு நியாயமாக வந்து சேரவேண்டிய பயன்கள் அனைத் தையும் உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும். இப்பிரச்ச னையில் உரிய தீர்வு எட்டப்படா விட்டால் மாநிலம் முழுவதும் இருந்து சாலைப்பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம். முன்னதாக, இந்த போராட் டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிஐ டியு கோவை மாவட்ட தலைவர் சி.பத்மநாபன், சாலைபோக்குவ ரத்து தொழிலாளர் சங்கத்தின் சம்மேளன பொதுசெயலாளர் எஸ். மூர்த்தி மற்றும் அரசு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்று உரையாற்றினர்.