tamilnadu

img

கோவையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை

கோவை, மே 29 -  கோவையில் பல்வேறு இடங்களில் சூறைக்காற்று, இடியுடன் கூடிய பலத்த  மழை பெய்ததால் பல இடங்களில் மரங்கள் விழுந்தன. மேலும், மின்சார துண்டிப்பால் பல பகுதிகள் இருளில் முழ்கின. கோவையில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்த நிலையில்  வியாழனன்று  மாலை ஒரு மணி நேரத்திற் கும் மேலாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.  குறிப்பாக கவுண்டம்பாளையம்,  துடியலூர்,  சாய்பாபா காலனி,  சிங்காநல் லூர், ஒண்டிபுதூர், நரசிம்மநாய்க்கன் பாளையம் மற்றும் பிற பகுதிகளில் மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனிடையே, மழை காரணமாக கருமத்தம்பட்டி ராயர் பாளையம் பகுதியில் உள்ள விநாயகர் கோவில் அருகில் இருந்த ஆலமரம் சாய்ந்தது. மேலும் மரம் விழுந்ததில் அங்குள்ள மின்கம்பம் சாய்ந்ததால் அப்பகுதியில் மின்சார தடை ஏற்பட்டது.  இதேபோல் கோவை ஒண்டிபுதூர் கம்போடியா மில் அருகே மழைக்காக ஒதுங் கிய சந்தனபாண்டியன் என்பவர் மீது மரம் விழுந்ததில் அவர் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாக, கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு காரணமாக பணி இல்லாத சூழலில் சந்தன பாண்டியன் தற்போதுதான் பணிக்கு சென்றுள்ளார். இச்சூழலில் மரம் விழுந்து அவர் படுகாயம் அடைந்துள்ளார். இவ ருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலை யில் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அவரது உறவினர் கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல், பொள்ளாச்சியில் பால கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான ஸ்ரீ  விஷ்ணு குமார் பேக்கரி செயல்பட்டு வந்தது. வியாழனன்று இரவு சூறைகாற்றுடன் மழை பெய்ததால் திடீரென கட்டிடம் பலத்த சத்தத்துடன் சரிந்து விழுந்தது.  கட்டிடம் சரிந்ததால் பேக்கரி முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கியது . மேலும், பேக்கரியில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. இச்சம்பவம் குறித்து  பொள்ளாச்சி  காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.