tamilnadu

img

தூய்மை பணியாளர்களை அவமதித்த சுகாதாரத்துறை ஆய்வாளர் நடவடிக்கை கோரி காத்திருப்பு போராட்டம்

கோவை, ஆக. 8- தூய்மைப் பணியாளர்களை சாதியின் பெயரைச் சொல்லி அவ தூறாக பேசிவரும் சுகாதாரத் துறை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவையில் தூய்மை தொழிலாளர்கள் பணி புறக்கணிப்பு செய்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பர பரப்பு ஏற்பட்டது.

கோவை மாநகராட்சிக்குட் பட்ட  67 ஆவது வார்டில் நூற்றுக் கணக்கான தூய்மைப் பணியாளர் கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் ஒலம்பஸ்,  சவுரிபாளை யம் பிரிவு உள்ளிட்ட முக்கியப் பகு திகளில் தூய்மைப் பணி மேற் கொண்டு வருகின்றனர்.

இந்நி லையில் சுகாதாரத்துறை ஆய்வா ளராக பணியாற்றி வரும் பவுன் ராஜ் என்பவர்,  அவ்வப்போது அங்கு பணியாற்றி வரும் தூய் மைப் பணியாளர்களை  சாதியின் பெயரில் இழிவுபடுத்திப் பேசி வரு கிறார்.

 மேலும், பெண்கள் தங்க ளின் அவசர தேவைக்காக ஏதே னும் வெளியில் சென்றால் கூட அத னையும் மையப்படுத்தி தவறுத லாக பேசி வருவதாக கூறப்படுகி றது. இதனால் தூய்மைப் பணியா ளர்கள் கடும் அதிருப்தியடைந்தி ருந்தனர். இந்நிலையில், இதுபோன்ற நடவடிக்கையில் தொடர்ந்து ஈடு படும் சுகாதாரத்துறை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி  67 ஆவது வார்டு மாநகராட்சி அலு வலகம் முன்பாக தூய்மைப் பணி யாளர்கள் நூற்றுக்கும் மேற்பட் டோர் காத்திருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டனர்.

மேலும், சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் தலைவர் சி. பத்மநாபன், பொதுச்செயலாளர் கே.ரத்தினகுமார், நிர்வாகிகள் ராஜாகணி, வீராச்சாமி, த.நாக ராஜ், ஆனந்தன் உள்ளிட்டோரும் ஆதரவாக போராட்டத்தில் ஈடு பட்டனர்.