பொள்ளாச்சி, ஆக.19- விளை நிலத்தில் வீணாகும் மழைநீரை சேமிக்க மானி யத்துடன் பண்ணை குட்டை அமைக்க விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து பொள்ளாச்சி வடக்கு தோட்டக்கலைத் துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரி வித்துள்ளதாவது, தமிழக தோட்டக் கலைத்துறை விவ சாயிகளுக்கு பல்வேறு மானியத் திட்டங்களை அறிவித்து விவசாய சாகுபடியை ஊக்குவித்து வருகிறது. மழைநீர் சேமிப்பிற்கு சிறு குளம் வெட்டுதல், சம உயர வரப்பு கட் டுதல், கசிவு நீர் குட்டை அமைத்தல் உள்ளிட்ட நீர் சேமிப்பு அமைப்புகள் ஏற்படுத்த மானியம் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதன்ஒருபகுதியாக, தற்போது மழைநீர் சேமிப்பிற்கு விளை நிலங்களில் பண்ணை குட்டை அமைப்பதற்கான மானியத் தொகையை தோட்டக் கலைத்துறை அறிவித்துள்ளது. அதில் தோட்டப்பகுதியில் 60 அடி நீளம், 60 அடி அகலம் மற்றும் 10 அடி ஆழத்தில் பண்ணைக் குட்டை அமைத்து, அதன்மேல் நீரை தேக்கி வைக்க, 300 மைக்ரான் அடர்வுள்ள பாலித்தீன் சீட் பரப்ப வேண்டும். இவ்வாறு அமைக்க ரூ.75 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படும். மேலும், இதுதொடர்பான விவரங்களுக்கு தோட்டக்கலை துறையை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.