tamilnadu

img

பணியில் இருந்த அரசு மருத்துவர் மாரடைப்பால் பலி

கோவை, செப். 25- கோவை அரசு மருத்துவமனை யில் பணிபுரிந்து வரும் மருத்துவர் மாரடைப்பினால் மருத்துவமனை யிலேயே மயங்கி விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற் படுத்தியுள்ளது. கோவை சாய்பாபா காலனி, அழகேசன் சாலையில் வசித்து வருபவர் பழனிச்சாமி (49). இவர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த நான்கு வருடங்களாக இயன்முறை மருத்து வராக பணியாற்றி வருகிறார். இந் நிலையில் மருத்துவர் பழனிச்சாமி புதனன்று வழக்கம்போல் மருத்துவ மனைக்கு பணிக்கு வந்தார். அப்பொழுது மருத்துவமனை  வளாகத்தில்  நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென மயங்கி தரை யில் விழுந்தார்.  இதைய டுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை மருத்து வமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் உயி ரிழந்து விட்டதாக தெரி வித்தனர்.அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மருத்து வர் பழனிச்சாமி மார டைப்பால் உயிரிழந்துள்ள தாக தெரிவித்தனர். சக  மருத்துவர் ஒருவர் மருத்துவ மனையில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த  சம்பவம் மருத்துவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச் சியையும், சோகத்தையும் ஏற்படுத் தியுள்ளது.