கோவை, செப்.4- தங்கத்தின் விலை தொடர்ந்து அதி கரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். கோவையில் புதனன்று ஒரு பவுன் தங்கம் ரூ.30 ஆயி ரத்து 120க்கு விற்பனை செய்யப்பட்டு வரு கிறது. தங்கம் விலை வரலாறு காணாத வகையில் தொடர்ந்து அதிகரித்து வரு கிறது. கடந்த ஜனவரி மாதம் ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 21 க்கு விற்பனை யானது. ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.24 ஆயிரத்திற்கு விற்பனையானது. ஜனவரி மாதம் துவங்கி தற்போது வரை தங்கத்தின் விலை சற்றும் குறையாமல் ஏறு முகமாகவே உள்ளது. இதனால் தங்கத்தின் மீது முதலீடு செய்துள்ளவர்கள் ஒரு புறம் மகிழ்ச்சியடைகிறார்கள் என்றாலும், சாதாரண ஏழை எளிய மக்கள் தங்கம் எட் டாக்கனியாக மாறுவதல் அச்சம் அடைந் துள்ளனர். கோவையில் புதனன்று ஒரு கிராம் தங் கம் ரூ.3 ஆயிரத்து 765 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் ரூ.30 ஆயி ரத்து 120 விற்பனை செய்யப்பட்டது. செவ்வாயன்று ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 829 விற்பனை செய்யப்பட்ட நிலையில் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.36 அதிகரித்து ரூ.30 ஆயிரத்தை தாண் டியுள்ளது. இதுகுறித்து தங்க நகை வியாபாரிகள் கூறுகையில், சர்வதேச சந்தை ஸ்திரத் தன்மை இல்லாததால் தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் மத்திய அரசு சமீபத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கு 2.5 சதவிகிதம் கூடுதல் இறக்குமதி வரி விதித்தது. இதனாலும் இந்தியாவில் தங்கத்தின் விலை அதி கரித்துள்ளது. அமெரிக்கா, சீனா இடையே நடக்கும் வர்த்தகப் போர் முதலீட்டா ளர்கள் தங்கத்தின் மீது கவனத்தை திருப்பியுள்ளனர். தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் கோவையில் அதன் விற்பனை 60 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. தங்கத்தின் விலை இறங்குவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் மேலும் அதிகரிக்க்கூடும் என தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தங்கநகை பட்டறையில் பணியாற்றும் தொழிலாளிகள் கூறுகை யில், தங்கத்தின் விலை நிலையில்லாமல் இருப்பதால் வியாபாரிகள் ஆர்டர் எடுப் பதில் தயக்கம் காட்டுகின்றனர். ஒரு மாதத்திற்கு பின் கொடுக்க வேண்டிய ஆர்டருக்கு தற்போதைய தங்கம் விலைக்கு பணம் பெற்றால், அன்றைய நிலையில் என்ன விலை இருக்கும் என்கிற நிலை தெரியாததால் நஷ்டம் ஏற்படும் என்பதால் ஆர்டரை எடுப்பதற்கு தயங்குகின்றனர். இதனால் பட்டறைகளில் பணியாற்றும் எங்களுக்கு வேலை இல்லாத நிலை ஏற் பட்டுள்ளது. தற்போதைய நிலையில் மத்திய அரசு விதித்துள்ள வரியை நீக்கி னால் கொஞ்சமாவது நிவாரணமாக இருக்கும். இல்லையென்றால் இதே நிலையே நீடிக்கும். எத்தனை நாளைக்கு இப்படியே ஒருவர் முகம் ஒருவர் பார்த்து அமர்ந்து இருப்பது என்றே தெரியவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.