கோவை, அக். 25- கோவையில் ரயில் டிக்கெட் எடுத்து தருவதாக கூறி மோசடி செய்த நேபாள நாட்டை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நேபாளத்தைச் சேர்ந்த 2 இளை ஞர்கள் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்ற னர். இவர்கள் தீபாவளியையொட்டி தங்களது சொந்த ஊருக்குச் செல்ல முடிவு செய்திருந்தனர். அதற்காக கோவை ரயில் நிலையம் வந்து ரயிலில் அவர்கள் பயணம் செய்ய முடிவு செய்திருந்தார்கள். ஆனால் டிக்கெட் கிடைக்கவில்லை. இதனை யடுத்து ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது கோவையில் உள்ள உணவகத்தில் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் நேபாளத்தைச் சேர்ந்த திருக்கமி என்பவர் தக்கலில் உங்க ளுக்கு டிக்கெட் எடுத்து தருகிறேன். அதற்கு ரூ.10,500 கொடுங்கள் என கூறியுள்ளார். அதன்படி இருவரும் பணம் கொடுத்த நிலையில் டிக்கெட் எடுத்து வருவதாக கூறிச் சென்ற திருக்கமி திரும்ப வரவில்லை. இதனால் தாங்கள் ஏமாற்றப் பட்டதை உணர்ந்த இளைஞர்கள், இதுகுறித்து ரயில்வே காவல்துறை யில் புகார் செய்தனர். இதனையடுத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் அவரை கண் காணித்து வந்தனர். இந்நிலையில், மீண்டும் ரயில் நிலையத்துக்கு வந்த திருக்கமியை ரயில்வே காவல்துறை யினர் கைது செய்தனர். இதன்பின் அரரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.