tamilnadu

img

நலிவுற்ற விவசாயிகளுக்கு மாதாந்திர ஊதியம் வழங்க கோரிக்கை நூதன முறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மேட்டுபாளையம், பிப்.5- நலிவுற்ற விவசாயிகளுக்கு  மாதாந்திர ஊதியம் வழங்கக் கோரி மேட்டுப்பாளையத்தில் நூதன முறையில் விவசாயிகள் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் சரியான பாசன வசதி கிடைக்காமலும், விளைப்  பொருட்களுக்கு உரிய விலை  கிடைக்காமலும், வனவிலங்குகள் ஊடுருவல் மற்றும் இயற்கை சீற்றத்தால் தொடர் இழப்புகளை சந்தித்து வரும் நலிவுற்ற விவசா யிகளுக்கு மாதாந்திர ஊதியம் வழங்க வேண்டும். விவசாயிக ளின் ஆலோசனையை பெற்று விவசாயதிற்கென தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும்.ஆண்டுதோறும் விவசாய வளர்ச்சிக்கு பல கோடி  ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட் டாலும் அவை முறைப்படி விவசா யிகளை சென்றடையாமல் உள் ளது. அதை முறையாக வழங்க  மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும்.  யானை, காட்டுப்பன்றி, மான், மயில் என வன உயிரினங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பு களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். அத்திக்கடவு அவி னாசி திட்டத்தில் விடுபட்டுள்ள  பகுதிகளை இணைந்து திட்டப்ப ணிகளை விரைவுபடுத்த வேண் டும் என்ற பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி புதனன்று மேட்டுப்பாளையத்தில் விவசா யிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.  இந்த ஆர்பாட்டத்திற்கு தமிழக  விவசாயிகள் சங்கத்தின் மாநில  பொது செயலாளர் வேணுகோ பால் தலைமைவகித்தார். இதில்  மறைந்த விவசாயிகள் சங்கத்தலை வர் நாராயணசாமி நாயுடுவின் முகமூடியை அணிந்தபடி ஏரா ளமான விவசாயிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியு றுத்தி முழக்கங்களை எழுப்பினர்.