tamilnadu

பிஏபி தண்ணீர் பல லட்சம் ஏக்கர் விவசாயத்திற்கா? பணக்கார கும்பலுக்கா?

அரசின் நடவடிக்கையை எதிர்த்து விவசாயிகள் குமுறல்

திருப்பூர், ஜூன் 1 - கோவை,  திருப்பூர் மாவட்டங்க ளில்  பரம்பிக்குளம்- ஆழியாறு திட் டம் மூலம் 4.25 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் நீர்ப் பாசனம் பெறுகிறது. இதில், 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களுக்கு திருமூர்த்தி அணையி லிருந்து தான் நீர் பாசனம் அளிக்கப்படு கிறது. இப்பாசன பகுதி மட்டும் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை  தண்ணீர் வழங்கப்படுகிறது.  இந்த ஆண்டு நான்காவது மண் டலத்திற்கு நான்கு சுற்று தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக கிடைக்காத நீர் இந் தாண்டு கிடைத்துள்ளது.  கடந்த மே 27ஆம் தேதி நிலவரப்படி பரம்பி குளம், சோலையாறு அணைகளில் 1.50 டிஎம்சி தண்ணீருக்கு மேல் நீர் இருப்பு இருக்கிறது. திருமூர்த்தி அணையிலும் 25 அடிக்கு மேல் தண் ணீர் இருக்கிறது. இந்நிலையில், பாசனம் பெற்று வரும் பகுதிக்கு இன்னொரு சுற்று தண்ணீர் வழங்க வாய்ப்புள்ளது. ஆனால் தமிழக அரசு  கடந்த 24 ஆம் தேதி நல்லாற்றில் குடிநீருக்கு என தண் ணீர் திறந்து விட்டுள்ளது. இது எதற்கு என்ற கேள்வி எழுகிறது.

நல்லாற்றின் கரையோர கிராமங் கள் அனைத்தும் கூட்டுக் குடிநீர் திட் டங்களில் இணைக்கப்பட்டுள்ள போது, கூடுதல் குடிநீர் ஆற்றில் திறக் கப்பட்டது‌ புரியாத புதிராக உள்ளது. ஆண்டு முழுவதும் தண்ணீரை பயன்ப டுத்தும் வசதியானவர்களுக்கும், ஆற் றில் மின்மோட்டார்கள் பொருத்தி உள்ளவர்களுக்கும்தான் இந்த தண்ணீ ரைத் திறந்துவிட்டுள்ளனர் என்பது தான் இதற்குக் காரணமாக இருக்கும். இதைத் தவிர வேறு என்ன நோக் கம் இருக்க முடியும் என விவசாயிகள் கேட்கின்றனர். பிஏபி நிர்வாகம் கான்டூர் கால்வா யில் திருமுர்த்தி அணைக்கு வரும் நீரை, கேரளாவிற்குத் தண்ணீர் கொடுப்ப தற்காக வறட்சியுள்ள இந்த நேரத் தில் ஆழியாற்றில் தண்ணீரை திறந்து விட அரசாணை பெற்றிட ஏற்பாடு களை செய்து வருகிறது. ஆழியாறு பாசன பகுதிக்கு பருவம் தொடங்குவ தற்கு முன்பே நாற்று விடுவதற்கு என தண்ணீர் விடுவதாக அறிந்து, பாசன சபைத் தலைவர்கள் கண்காணிப்புப் பொறியாளரைச் சந்தித்து ஆட்சே பனை தெரிவித்துள்ளனர். இது பத்தி ரிகைகளில் செய்தியாக வந்துள்ளது. தமிழக அரசும், பிஏபி நிர்வாகமும் பரம்பிக்குளம் தண்ணீரை யாருக்காக பயன்படுத்துகிறது? ஆழியார் ஆற்றில் திறந்து விட்டால், ஆற்றில் பம்ப்செட் வைத்துள்ளவர்கள், ஆண்டு முழுவ தும் அதிகமாக தண்ணீரைப் பயன் படுத்தும் பெரு்முதலாளிகள், வசதி படைத்தவர்கள், மினரல் வாட்டர்  நிறுவனங்கள் ஆகியோர் லாபம் அடை யத்தான் இது பயன்படும். எப்போதும் இல்லாத நடைமுறை இப்போது ஏன்? யாருடைய லாபத்திற் காக? ‌என விவசாயிகள் குமுறலுடன் கேட்கின்றனர். ஒருவேளை‌ தொகுப்பு அணைகளில் இந்தாண்டு பருவ மழை பொய்த்துவிட்டால் என்ன செய்வது என்ற கேள்விக்கு பிஏபி நிர் வாகத்திடம் விடையில்லை.

பரம்பிக்குளம் ஆழியாறு திட் டத்தில் அதிகமான பாசனப் பரப்பு கொண்ட திருமூர்த்தி அணைக்கு வந்து சேர வேண்டிய தண்ணீரை கூடு தலாக ஆண்டுதோறும் கான்டூர் கால் வாயில் இருந்து ஆழியாற்றில் திருப்பிக்   கொள்வது நியாயமில்லை. சில நூறு பேருக்காக லட்சம் ஏக்கரை காய வைக்கலாமா? கேரள மாநிலத் திற்கு தண்ணீர் கொடுக்கிறோம் என்று சொல்லி, ஆழியார்ஆற்றில் விடுவது திருடன் கையில் சாவியை கொடுப்பது போல் ஆகும். ஆற்றுக்குள்ளேயே சட்ட விரோதமாக ஆயிரத்திற்கு மேற்பட்ட மோட்டார் பம்புசெட் வைத்துள்ளவர் கள் தண்ணீரை உறிஞ்சிப் பயன்படுத்த தமிழக அரசும், பிஏபி நிர்வாகமும் துணை நிற்கின்றன. ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறை ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் தண்ணீர் கிடைத்து வந்த பிஏபி பாசனம் தற் போது இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை என்பதும், அதிலும் நான்கு சுற்று மாதத்திற்கு இரண்டு நாள்  தான் தண்ணீர் கிடைக்கும் என்ப தும் விவசாயிகளை வதைக்கக்கூடி யதாக உள்ளது. பிஏபி பாசனத் தண் ணீர் விவசாய விளை நிலங்களுக்குப் பாய்ச்சவா? அல்லது தண்ணீரை விவசாயிகள் கண்ணில் மட்டும் பார்க் கத்தானா?    3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கருக்கு தண்ணீர் கொடுப்பதையே உறுதிப டுத்தாத அரசு, ஆழியார் ஆற்றுக்குள் மின் மோட்டார் வைத்தும், உடுமலை ஏழுகுளம் கால்வாயில் இருந்து கிண றுகளுக்கு‌ பைப் அமைத்து தண்ணீர் எடுத்துக் கொள்ள, வசதி படைத்த வர்கள், வாய்ப்புள்ளவர்கள், அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்கள், நிதி நிறு வன அதிபர்களுக்காக துணை நிற்பது தான் நீதியா என விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

‌பிஏபி பிரதான கால்வாயில் உடு மலை கால்வாயில்  பேர்வெல் போட்டு தண்ணீர் எடுத்தும் பாதைவரி அனுமதி பெற்று பல லட்சங்கள்  செலவு செய்து  பைப் லைன் அமைத்து வசதியும் வாய்ப் பும் உள்ளவர்கள் பத்து கிலோ மீட் டர், இருபது கிலோ மீட்டர் கொண்டு போய் பாசனம் செய்தாலோ, விற் பனை செய்தாலோ கவலை இல்லை  என கண்டும் காணாமல் இருக்கும் பிஏபி நிர்வாகம், வசதி படைத்தவர் கள், அதிகாரத்தில் உள்ளவர்கள்  குழாய் போட்டு தண்ணீர் உறிஞ்சு வது உயர் அதிகாரிகள் கண்ணும் தெரி யாதது மட்டுமல்ல,  காதும் கேட்கா மல் கண்டும் காணாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இவ்வாறு, அரசும், பிஏபி நிர்வாக மும் சாதாரண  விவசாயிகளின் குழாய் களை மட்டும்‌ ஓடி, ஓடி துண்டு துண் டாக வெட்டிக் கொண்டு, தன் மீசையை முறுக்குகிறது. ஆனால் பணக்காரர் கள் தண்ணீர் திருட்டுக்கு உடந்தை யாக வாய் மூடி மௌனம் காக்கிறது. ஆகவே அனைத்து பகுதி விவசாயி களும் ஒன்றிணைந்து ஆழியார் கடாம் பாறை அணையில் உள்ள முக்கால்‌ டி.எம்.சி நீரை கேரளத்திற்கு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ள னர்.      

ஐந்தாம் சுற்றுத் தண்ணீரைப் பிஏபி பாசனப் பகுதிக்கு வழங்க வேண்டும். இல்லாவிட்டால், அனைத்து பகுதியி லுள்ள தென்னை, மா உட்பட மரங்க ளுக்கு உயிர்த் தண்ணீர் வழங்கிட வேண்டும். இருப்பிலுள்ள தண்ணீரை ஒரு சிலருக்கு மட்டும் உரிமையாக்கி பெரும் பகுதினரை வஞ்சிப்பது, “வல்லான் வகுத்ததே வாய்க்கால்” என அரசே உதவி செய்யும் நிலையை விவசாயிகள் அனுமதிக்க மாட்டார்கள் என்று தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் கூறினார்.