tamilnadu

img

பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் விவசாய சங்கத்தினர் கலந்துரையாடல்

விளை நிலங்களில் பெட்ரோலிய குழாய் பதிக்கும் திட்டம்

சங்ககிரி, நவ.21- விளைநிலங்களில் பெட் ரோலிய குழாய் பாதிக்கும் திட்டத் தால் பாதிக்கப்பட்ட விவசாயி களை, விவசாய சங்கத்தினர் சந்தித்து கலந்துரையாடினர்.   கோவை இருகூர் முதல் பெங் களூரூ தேவனகுந்தி வரை விவசாய  விளை நிலங்களில் ஐடிபிஎல் பாரத்  பெட்ரோலிய நிறுவனம் குழாய்  மூலமாக எடுத்து செல்லப்பட உள்ளது. இந்த நாசகாரத் திட் டத்தை நிறைவேற்ற தமிழக மேற்கு மாவட்டங்களில் உள்ள விவசாய விளைநிலங்களை  கையகப் படுத்திட, விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி  வருகிறது.  இதனால் சேலம் மாவட்டத்தில்  சங்ககிரி, எடப்பாடி, ஓமலூர், மேட்டூர் தாலுகாவில் ஏராளமான  விவசாயிகள் பாதிப்பிற்குள்ளா கினர்.  இந்நிலையில் சங்ககிரி  வட்டம்,வளையசெட்டிப் பாளையம் பகுதியில் பாதிக்கப் படும் விவசாயிகளை சந்தித்து  ஆலோசனைக்கூட்டம் நடை பெற்றது. இதில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஏ.ராமமூர்த்தி, தாலுகா செயலாளர் ராஜேந்திரன், நிர்வாகிகள் வழக்கு ரைஞர் ராமசாமி, நல்லத்தம்பி, கொங்கு தேசிய மக்கள் கட்சி  மாவட்ட செயலாளர் சரவணன்  கலந்துக் கொண்டனர்.  இதில் பாதிக்கப்பட்ட ஏராள மான விவசாயிகள் கலந்து கொண் டனர்.