உடுமலை, ஜூன் 19- உடுமலை வட்டாட் சியர் அலுவலகத்தில் நடை பெறும் வருவாய் தீர்வா யத்தில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களின் குறைகளை அதி காரிகளிடம் மனுவாக தந்து வருகிறார்கள். இதன் படி செவ்வாயன்று ஜல்லிபட்டி பகுதி மாம்பழம் விவசாயம் செய்த விவசாயிகள் முழு மையாக விளைச்சல் பெறாத மாம்பழங்களை அதிகாரிகள் முன்பு கொட்டி தங்களுக்கு அரசு நிவா ரணம் வழங்குமாறு வலியுறுத்தினர். இது குறித்து பாதிக்கப்பட்ட விவ சாயிகள் கூறுகையில், மேற்கு தொடர்ச்சி மழை அடிவார பகுதியில் சுமார் ஐநூறு ஹெக்டேர் விவசாய நிலங்களில் மாம் பழங்களை விவசாயம் செய்து வருகிறோம். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மாம்பழம் விளைச்சல் உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யவில்லை. இதனால் இந்தாண்டு மரங்களில் அரைக் கிலோவுக்கும் மேல் இருக்க வேண்டிய மாம்பழங்கள் வெறும் ஐம்பது கிராம் எடை அளவு சிறிதாக விளைந்துள்ளது. இதனால் நாங்கள் பெரியளவில் பாதிப்படைந்து உள்ளோம். வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே மாம்பழம் விளையும். எனவே தமிழ அரசு மாம்பழ விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.