மே.பாளையம், ஜூலை 3- கோவை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள பகுதிகளில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக நிகழும் யானை கள் உயிரிழப்பு தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டுமென வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனச்சரகத் திற்கு உட்பட்ட கண்டியூர் வனப்பகுதி அருகே உள்ள விவ சாய நிலத்தில் வியாழனன்று பெண் காட்டு யானை யொன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகு றித்து அப்பகுதி மக்கள் மேட்டுப்பாளையம் வனத்துறையி னருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத் திற்கு சென்ற வனத்துறையினர் இறந்த யானையின் உடலை ஆய்வு செய்தனர். வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் நீர் நிலைகளை தேடி வெளியேறிய இந்த யானை அங்குள்ள தனியார் தோட்டத்தை கடந்து செல்ல முற்பட்ட போது இறந்தது தெரியவந்தது. யானையின் காது பகுதி யில் முள் கம்பி கிழித்துள்ள காயமும் தெரிந்தது. இதனால் யானை அருகில் உள்ள தோட்டங்களில் அமைக்கப்பட் டுள்ள மின் வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து பலியா னதா? அல்லது வேறு காரணங்களினால் இறந்ததா? என்ற அடிப்படையில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், வனத்துறை கால்நடை மருத்துவர் தலை மையில் நடைபெற்ற பிரேதப் பரிசோதனையில், பெண் யானையின் தலைப்பகுதியை துளைத்து மூளையில் ஈயக் குண்டு தாக்கி உள்ளது தெரியவந்தது.
இதையடுத்து அத் தோட்டத்தைச் சேர்ந்த தேக்கம்பட்டி ராமசாமி மற்றும் கிருஷ்ணசாமி ஆகிய இருவரையும் கைது செய்த வனத்து றையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இதற்கிடையே, கோவை சிறுமுகையிலும் ஒரு பெண் யானை மர்மமான முறையில் வனப்பகுதியில் இறந்து கிடந்தது. இதைத்தொடர்ந்து அதே சிறுமுகை வனச்சரகத் திற்கு உட்பட்ட டேம்காடு என்னுமிடத்தில் ஒரு ஆண் யானை காட்டுக்குள் உயிருக்கு போராடி வந்த நிலையில் வெள்ளியன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
அடுத்த டுத்து மூன்று யானைகள் உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர் களிடம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடந்த 10 நாட்களில் 6 யானைகள் உயிரிழந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களில் கோவை வனக் கோட்டத்தில் மட்டும் 12 யானைகள் உயிரிழந்துள்ளது. இது தொடர்பாக மத்திய, மாநில வனத்துறை உயர் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தொடர்ந்து யானைகள் பலியாவதை தடுத்திட முடியும் என வன ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும் ஒரு யானை பலி
இதற்கிடையே, நீலகிரி மாவட்டம், மசனகுடி ஆச்சக்கரை பகுதியில் புதனன்று இரவு ஆண் யானை ஒன்று தனியார் தோட்டத்தில் புகுந்தபோது குடியி ருப்புகளுக்கு செல்லும் மின்சார கம்பி தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று வனத்துறையி னர் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்த னர். இதன்பின் யானை உயிரிழப்பு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.