வங்கி ஊழியர்கள் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
சேலம், அக்.23- மத்திய அரசு வங்கிகள் இணைப் பை கைவிட வலியுறுத்தி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் இணைந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் செவ்வாயன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. வங்கிகள் இணைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுக்க வேண்டும். வராக்கடன் நிலுவை வைத்துள்ள கார்ப்பரேட் நிறுவ னங்கள் மீது சட்ட ரீதியிலான நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், இந்திய வங்கி ஊழியர் சம்மே ளனம் இணைந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேள னத்தின் சேலம் மாவட்ட தலைவர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். இதில் வங்கி ஊழியர் சம்மேளன மாநில செயலாளர் எஸ்.ஏ.ராஜேந் திரன், மாவட்ட செயலாளர் தீன தயாளன், ரகுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.