சேலம்:
லாபம் ஈட்டும் வங்கிகளை மற்றவங்கிகளோடு இணைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் எனகிராம வங்கி ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு கிராம வங்கி ஆபீசர்ஸ் அசோசியேசன், தமிழ்நாடு கிராம வங்கி ஒர்க்கர்ஸ் யூனியன் இணைந்து நடத்தும் மாநில அளவிலான முதல் மாநாடு ஜனவரி 9, 10 தேதிகளில் சேலம் நகரில் நடைபெற்றது. ஆபீசர்ஸ் அசோசியேசன் தலைவர் பத்மநாபன், ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர்சுரேஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் வரவேற்புக் குழு தலைவர் வழக்கறிஞர் பொன். ரமணி, செயலாளர் அறிவுடைநம்பி வரவேற்று உரையாற்றினார். அகில இந்திய கிராம வங்கி ஊழியர் சங்க தலைவர் ராஜீவன், மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார்.
அகில இந்திய பொதுச் செயலாளர் வெங்கடேஸ்வர ரெட்டி, இந்தியவங்கி ஊழியர் சம்மேளன செயலாளர் சி.பி கிருஷ்ணன், மாநில செயலாளர் எஸ்.ஏ.ராஜேந்திரன், தமிழ்நாடு வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஜா.மாதவராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதனைத்தொடர்ந்து, பறிபோகும் உரிமைகளும் ஜனநாயகமும் என்றதலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு சங்க மதிப்புறு தலைவர் ச.தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கத்தில், மதுரைநாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க செயலாளர் ஆதவன் தீட்சண்யா, கல்வியாளர் ஜவஹர்நேசன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.
முன்னதாக, இம்மாநாட்டில், கிராமவங்கிகளில் காலியாக உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். லாபம் ஈட்டும் வங்கிகளைமற்ற வங்கிகளோடு இணைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். தொழிலாளர்கள் விரோதப் போக்கைகையாண்டு வரும் நிறுவனத்தின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக் கப்பட்டதுடன், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வங்கி நிர்வாகங்கள் துணை போவதையும், அதனை மத்தியஅரசு அங்கீகரிப்பதையும் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும், தற்போது தங்களின் வாழ்வாதாரத்திற்காக தில்லியில் போராடி வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதுடன், மத்திய அரசின் வேளாண்சட்டத்திருத்தத்தில் உள்ள விவசாயிகள் விரோத அம்சங்களை களையவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இந்தமாநாட்டில் மாநிலத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் என திரளானோர் பங் கேற்றனர்.
புதிய நிர்வாகிகள் தேர்வு
தமிழ்நாடு கிராம வங்கியின் ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் பிரதீவி ராஜ்,செயலாளர் அஸ்வத், பொருளாளர் முத்துக்குமார் மற்றும் 37 பேர் கொண்ட செயற்குழுவும், தமிழ்நாடுகிராம வங்கி ஆபீசர்ஸ் அசோஷியேஷன் தலைவராக பத்மநாபன், பொதுச் செயலாளராக அறிவுடைநம்பி, பொருளாளராக ஆறுமுக பெருமாள் உள்ளிட்ட 41 பேர் கொண்டசெயற்குழுவும் தேர்ந்தெடுக்கப் பட்டன.
படக்குறிப்பு :சேலத்தில் நடைபெற்ற தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர் - அதிகாரிகள் முதலாவது மாநாட்டில் அகில இந்திய கிராம வங்கி ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் வெங்கடேஸ்வர ரெட்டி உரையாற்றினார். மேடையில் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள்.