கோவை, ஜன. 10 – விஷம் கலந்த உணவை நாய்களுக்கு கொடுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை கணேசபுரம் பகுதியில் கடந்த ஒரு வாரகா லமாக பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து போயின. இந்நிலையில் வெள்ளியன்று மூன்று நாய்கள் இறந்துள் ளது. நாய்களுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்துள்ள தால் நாய்கள் இறந்து போயுள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சமூக ஆர்வலர் ஒருவர் புளுகிராஸ் அமைப் பில் புகார் தெரிவித்துள்ளார். மேலும், இராமநாதபுரம் காவல் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளார். இதில் திட்ட மிட்டு நாய்களை கொல்லும் நோக்கத்தோடு விஷம் வைத்து கொன்றுள்ளனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண் டுள்ளார்.