tamilnadu

img

5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேர்வு என்னும் வன்முறையை திணிக்காதே - மாணவர்கள் போராட்டம்

கோவை, செப். 16- ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு களுக்கு பொதுத்தேர்வு நடத்து வதை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் தலைமையில் கோவை அரசு கல்லூரி மாணவர் கள் திங்களன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது இதற்கு தமிழகம் முழு வதும் கடும் எதிர்ப்பு எழுந்துள் ளது. இந்த தேர்வுகளைத் திரும் பப் பெறக்கோரி பல்வேறு அமைப்பினரும் போராட்டங்க ளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை அரசு கலைக் கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தினேஷ் ராஜா தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், பத்து  வயது குழந்தைகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவது ஏற்புடை யது அல்ல, மாணவர்களின் அறி வுத்திறனை மேம்படுத்துவதற்கு பதிலாக தேர்வு என்னும் வன் முறையை திணிக்காதே, இடை நிற்றலை திட்டமிட்டு உருவாக் காதே என முழக்கங்களை மாண வர்கள் எழுப்பினர்.  இதேபோல், டவுன்ஹால் அருகில் உள்ள கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மற்றும் மாணவர் பெருமன்றத்தினர் திங்களன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாணவர் பெருமன்ற மாநில தலைவர் குணசேகர், இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் வசந்தகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட அனை வரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.