tamilnadu

மாற்றுத்திறனாளி இளம்பெண்கள் பாலியல் வன்கொலை வழக்குகள்

தருமபுரி, ஜூன் 4-தருமபுரியில் மாற்றுத்திறனாளிகள்  பாலியல் பலாத்காரம் மற்றும் வன்கொலை வழக்குகளில் உரிய நடவடிக்கை செய்யப்பட்ட எடுப்பதாக மாவட்ட  காவல்கண்காணிப்பாளர் உறுதியளித்ததின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டிருந்த காத்திருப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.தருமபுரி மாவட்டம், பென்னாகரம் காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாற்றுத்திறனாளி பெண்கள் மீது கடந்த ஆண்டு நிகழ்த்தப்பட்ட மூன்று வெவ்வேறு பாலியல் குற்ற வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்காமல் தருமபுரி மாவட்ட காவல்துறை அலட்சியம் செய்து வருகிறது. குறிப்பாக,  2018 மே 1ஆம் தேதியன்று பென்னாகரம் வட்டம் பருவதனள்ளியில் 26 வயது மதிக்கத்தக்க  மனவளர்ச்சி பாதித்த இளம் பெண் சமூக விரோதிகளால் கூட்டாக பாலியல் வல்லுறவு செய்து கிணற்றில் வீசி கொல்லப்பட்டார்.ஒரு வருடகாலம் கடந்த பின்னரும்குற்றவாளி ஒருவர் கூட இதுவரை கைது செய்யப்படவில்லை.

இதேபோல், 2018  அக்டோபர்மாதத்தில்  ஜக்கம்பட்டியில் 11 வயதுடைய மாற்றுத்திறனாளி சிறுமி வல்லுறவு செய்யப்பட்ட வழக்கில் முக்கியத் தடயமான சிறுமியின் உடைகளைக் காவல்துறையின் அஜாக்கிரதையால் தொலைக்கப்பட்டுள்ளது. அதே மாதத்தில் ஜெல்ராம்பட்டியில் 40 வயது மதிக்கத்தக்க சரியாகப்பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண் அதே பகுதியைச் சேர்ந்தஒருவரால் வல்லுறவு செய்ய முற்பட்ட வழக்கில் கட்டப்பஞ்சாயத்து செய்து,  குற்றம் செய்தவரையே இரண்டாம் திருமணம் செய்ய நிர்பந்திக்கப்பட்டது. இதனால் அந்த மாற்றுத்திறனாளி பெண் தற்கொலை செய்துகொண்டார்.இந்த மூன்று குற்ற வழக்குகளிலும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடுஅனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்களுக்கான  சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள்சார்பாக கடந்த ஆண்டு டிச.12 ஆம்தேதியன்று தருமபுரியில் கண்டன போராட்டம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அன்று மாலைநடந்தபேச்சுவார்த்தையில் சம்மந்தப்பட்ட வழக்குகளில்15 நாட்களுக்குள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சங்கத்திற்குதெரிவிக்கப்படும் என்றும் அப்போதைய மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பண்டி கங்காதர்தெரிவித்தார்.

ஆனால், அதன் பின்னர் 6 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இந்த வழக்குகளில் காவல்துறை முறையான நடவடிக்கைகள் எடுக்கவில்லை. இது குறித்துதற்போதைய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் விளக்கம் கேட்க நேரம் ஒதுக்கித்தர கேட்டும் எந்தப் பலனும் இல்லை.  இதையடுத்து மேற்கூறிப்பிட்ட வழக்குளில் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும்பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்இணைந்து ஜூன் 4 ஆம் தேதியன்று (செவ்வாய்கிழமை) தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்புகாத்திருக்கும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பட்டது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் திங்களன்று இரவு தருமபுரிமாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்டகாவல்கண்காணிப்பாளர் ராஜன்தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன், மாநில பொருளாளர் கே.ஆர்.சக்கரவரத்தி, மாநில துணைத் தலைவர்கள் பி.பாரதி அண்ணா, எஸ்.சண்முகம், மாநில செயலாளர் பி.ஜீவா, மாவட்ட தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி, மாவட்ட செயலாளர் கே.ஜி.கரூரான், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.கிரைஸாமேரி, மாவட்ட துணைத்தலைவர் கே.பூபதி,  நிர்வாகிகள்கே.சுசீலா, எஸ்.தமிழ்மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து,டி.எஸ்.ராமச்சந்திரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் டி.மாதையன் ஆகியோர் பங்கேற்றனர்.இந்த பேச்சுவார்த்தையில்  மேற்கண்ட 3 வழக்குகளிலும் ஒரு மாதத்துக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், மேலும்இவ்வழக்குகளில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான சட்டத்தின் அடிப்படையிலும், போக்ஸோ சட்டத்தை  இணைத்துவழக்கு பதிவு செய்வதாகவும்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் உறுதியளித்தார். இதன் அடிப்படையில் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.