tamilnadu

img

டெங்கு காய்ச்சலும், தடுப்புமுறைகளும்

 திருப்பூர், அக். 23 - சமீப நாட்களாக டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் நிலவேம்பு கசாயம் அந்த காய்ச் சலைக் கட்டுப்படுத்தவும், குண மாக்கவும் முக்கியமான தீர்வாக இருக்கிறது என திருப்பூரைச் சேர்ந்த நலம் மருத்துவமனை ஹோமியோ மருத்துவர் இரா. திரு வேங்கடம் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதா வது, டெங்கு, டைபாய்டு, வைரஸ் காய்ச்சல், மலேரியா, சிக்கன்கு னியா போன்றவைகளை பரப்பும் “ஏடிஎஸ்” கொசுக்கள், “புலிக் கொசு” எனும் ஏடிஎஸ் “ஆல்போ டிக்டாஸ்”கொசு, மறைந்து வந்து நம்மைக் கடிக்கும். நோய் பரப்பும் இக்கொசுக்கள் தேங்கிய நல்ல நீரில் 100 முதல் 120 முட்டைகள் இடும். கொசுக்களின் வாழ்நாள் 24 நாட்கள். அதில் ஆறு முறை முட்டையிடும். மனித ரத்தத்தை மட்டுமே உறிஞ்சும். ஆனால் முட் டைகள் 6 மாதங்கள் வரை வாழும். மழைக் காலங்களில் முட்டை பொரித்து கொசு உற்பத்தியாகும். தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. சாதாரண காய்ச்சல் தானே என அலட்சியமாக இல் லாமல் அரசு மருத்துவமனை களுக்குச் சென்று ஆலோசனை மற்றும் இரத்தப்பரிசோதனை, சிகிச்சை பெறுவது நல்லது. 

நிலவேம்பு கசாயம் முக்கிய தீர்வு

லாமிச்சம் வேர், சந்தனம், பேய்ப் புடல், கோரைக் கிழங்கு, சுக்கு, மிளகு, பற்படாகம் போன்ற 9வகையான மூலிகைகள் உள் ளன. இவற்றை சேர்த்து நில வேம்பு கசாயம் தயாரித்து கொடுக்க வேண்டும். நிலவேம்பு டெங்கு வைரஸை அழிக்கும், வெட்டிவேர், சந்தனம், உடல் குளிர்ச்சியை தரும், விளாமிச்சை வேர், பற்படாகம் வியர்வை மூலம் வெளியேற்றி காய்ச்சலை கட்டுப் படுத்தும்.  டெங்கு நோயினால் இறப்ப தற்கு முக்கிய காரணம் கல்லீரல் பாதிப்புதான். பேய்ப்புடல் கல்லீ ரலை பாதிக்கவிடாமல் காக்கும். கோரைக் கிழங்கில் கால்சியம் அதி கமுள்ளதால் மூட்டுவலி, உடல் அசதியைப் போக்கும்.  சுக்கு உமிழ்நீரை சுரக்கும். மிளகு நச்சை நீக்கும். இந்த  9 மூலிகைகளும் நிலவேம்பு சூர ணம் ஆகும். இந்த நிலவேம்பு குடிநீரை அனைத்துவித காய்ச்சலுக்கும் பயன்படுத்தலாம். காய்ச்சல் சரி யாகும் வதை காலை, இரவு ஆகிய இரு வேளைகளில் 30 மிலி தரலாம். தட்டணுக்கள் குறைந்தால் பப்பாளி இலை சாறும் காலை, மாலை தரலாம். இருமல், சளியு டன் இருந்தால் ஆடாதொடா மணப்பாகு சேர்த்து தரலாம். இவை தட்டணுக்களை அதிகமாக் கும். டெங்குவை தடுக்க அரசு சிறு சுகாதார நிலையங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பற்றிய கையேடுகள், கருத்தரங் குள் மூலம் போதிய விழிப்பு ணர்வு ஏற்படுத்தி குடியிருப்போர் நல சங்கங்கள், பொது நல அமைப்புகள் மற்றும் பொது மக்களிடம் கலந்து பேசி சிறு, சிறு குழுக்களாக அமைத்து பொதுமக்களுக்கு வருமுன் காப்போம் நடவடிக்கை பற்றிய கலந்துரையாடல் மூலம் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட லாம். நோயற்ற வாழ்வே குறை வற்ற செல்வம் என்பதைப்போல் அனைத்து உதவிகளையும் அர சாங்கத்தை மட்டும் எதிர்பார்க் காமல் பொது மக்களாகிய நாமும் சமூக சிந்தனையோடும், பொது நல நோக்கோடும் செயல்பட்டால் டெங்கு வைரஸில் இருந்து முற் றிலும் பாதிப்பில்லாத நிலையை உருவாக்கலாம் என திருப்பூரைச் சேர்ந்த ஹோமியோ மருத்துவர் இரா.திருவேங்கடம் தெரிவித் தார்.