கோவை, ஜுன் 1- ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ரூ.7,500 நிவா ரணம் வழங்கிட வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி கோவையில் மாதர் சங்கத் தினர் பல்வேறு பகுதிகளில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். நூறுநாள் வேலை திட்டத்தை துவங்க வேண்டும். சுய உதவிக் குழுக் களுக்கு வட்டியில்லா கடன் வழங் கிட வேண்டும். மூன்று மாதங்களுக்கு ரேசன் கடைகள் மூலம் குடும்பங்க ளுக்குத் தேவையான மளிகை பொருட்களை இலவசமாகவும், மானிய விலையில் காய்கறிகளையும் வழங்கிட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அரசு வழங்கி வந்த நாப்கின்களை தொடர்ந்து வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கத்தினர் பல்வேறு பகு திகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். இதில் மாதர் சங்க மாவட்ட செய லாளர் ஏ.ராதிகா, பொருளாளர் ஜோதி மணி, மாநிலக்குழு உறுப்பினர்கள் ராஜலட்சுமி, சுதா உள்ளிட்ட நிர்வா கிகள் பங்கேற்றனர்.